பேச்சைக் குறைக்குமாறு இலங்கைக்கு ஐ.நா வலியுறுத்து!

un-logo1இலங்கை அரசாங்கம் பேச்சை குறைத்து, செயலில் ஈடுபட வேண்டியகாலம் வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான மனிதாபிமான பிரதிநிதி சுபினாய் நண்டி இதனைத் தெரிவித்துள்ளார்.

2009ம்ஆம் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சுமார் 480000 பேர் இடம்பெயர்ந்தனர்.

அவர்களை மீள குடியேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேசத்தின் பல மனிதாபிமான அமைப்புகள் இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்கின.

நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதும், இடம்பெயர்ந்த மக்களுக்கு செய்ய வேண்டிய தேவைகள் இன்னம் மீதமுள்ளன.

எனவே அரசாங்கத்தின் திட்டங்களை வெறும் பேச்சுவார்த்தைகளில் மட்டுப்படுத்தாமல், அதற்கு செயலுருவம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: