பாஸ்: எகிப்திய நெருக்கடி மீது நாடாளுமன்றக் கூட்டம் நடத்துக

salahuddin-ayubமலேசியா, அவசர நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்தி  எகிப்திய இராணுவம் பொதுமக்கள்மீது படைபலத்தைப் பயன்படுத்தியதைக் கண்டிப்பதுடன் அந்நெருக்கடி குறித்து விவாதிக்க இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்தின் அவசரக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது..

இதன் தொடர்பில் பாஸ், மகஜர் ஒன்றைப் பிரதமர் அலுவலகத்தில் இன்று சமர்ப்பித்தது. மகஜரைக் கொடுக்க சென்ற பாஸ் பேராளர் குழுவுக்குத் தலைமைதாங்கிய அக்கட்சியின் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப், மலேசியா எகிப்திய இராணுவம் இழைத்த கொடுமைகளைக் கண்டித்தாலும் அழுத்தம்திருத்தமாகக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றார்.