இன்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சாவின் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம், அம்னோ மகளிர் தலைவி ஷரிசாட் அப்துல் ஜலில் அவரின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுவாரா என்று இரண்டாவது தடவையாக கேட்கப்பட்டது.
அதற்குப் பிரதமர் நேரடியாக பதிலுரைக்காமல், அந்த முன்னாள் மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர்மீது, “அவ்வளவு அக்கறை காட்டுகிறீர்களே, ஏன்?”, என்று செய்தியாளர்களைத் திருப்பிக் கேட்டார்.
அக்கறை காட்டவில்லை பிரதமர் அவர்களே ! ஆடு மாடுகள் வாங்க புத்ரஜயாவை அடகு வைத்துவிடுவாரோ என்ற ஒரு அச்சம்தான் !!
காரியக்காரி, கைகேர்ந்த பசப்புக்காரி, வித்தைகாட்டும் மாயக்காரி , மாமாக் வழிவந்த வசியக்காரி, வாரி முடிச்ச வஞ்சகக்காரி !!! இப்படி இருந்தா பயம் வராதா???