ஐரோப்பிய ரயில் சேவைகளை தகர்க்க அல்-கைடா சதி

Al-Qaedaஐரோப்பாவின் அதிவிரைவு ரயில் நிலையங்களை தகர்க்க அல்-கைடா பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, உளவு நிறுவனம் எச்சரித்துள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜன்சி, அல்-கைடா அமைப்பின் முக்கிய புள்ளிகளின் தொலைபேசி உரையாடல்களை கேட்டுள்ளது.

இந்த தொலைபேசி உரையாடலில் மூலம் ஐரோப்பிய ரயில் சேவைகள் முழுவதையும் தகர்ப்பது குறித்து, பயங்கரவாதிகள் சதி செய்தது அம்பலமானது.

ஐரோப்பாவில் இயக்கப்பட்டு வரும் அதிவிரைவு ரயில்களிலும், அவை செல்லும் சுரங்கப் பாதைகளிலும் வெடிகுண்டு வைத்து தகர்க்க, தீவிரவாத அமைப்பான அல்-குவைதா திட்டம் தீட்டியுள்ளதை ஐரோப்பிய உளவு நிறுவனமான பில்ட் உறுதிப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஐரோப்பிய நாடுகளிலுள்ள முக்கிய ரயில் நிலையங்களில் சாதாரண உடையணிந்த பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.