ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளதாக சரளா ஜெயரட்னம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஜெயரட்னத்தின் மனைவியே இவ்வாறு முறைப்பாடு செய்ய உள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து சரளா ஜெயரட்னம், நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளார்.
கொழும்பில் தமது கணவரை கடத்திய புலிகள் வன்னியில் வைத்து கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தகவல்களை மூடிமறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ள நிலையில், சரளா நவனீதம்பிள்ளையை சந்திப்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.