ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவது தொடர்பில் தனது எதிர்ப்பை வெளியிடுவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் செய்த குற்றங்களை அல்ல பயங்கரவாத அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை ஆராய்ந்து பார்க்கும் காலம் ஐக்கிய நாடுனள் அமைப்புக்கு வந்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதுடன் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் விஜயம் செய்ய உள்ளார்.
அண்மையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ தாக்குதல் தொடர்பாகவும் அவர் ஆராயவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தவிர இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் அவர் விஜயம் செய்யவார் என எதிர்பார்க்கப்படுகிறது.