சஞ்சீவனின் தந்தைக்கு மகன் சுடப்பட்ட விவகாரத்தை நெகிரி போலீசாரே விசாரிப்பதில் வருத்தம்

1-fatherமைவாட்ச் தலைவர் ஆர். ஸ்ரீசஞ்சீவன் சுடப்பட்ட விவகாரத்தை விசாரிப்பதில் நெகிரி செம்பிலான் போலீசாரே தொடர்ந்து ஈடுபடுவது கண்டு அவரின் தந்தை பி.ராமகிருஷ்ணன் வருத்தம் அடைந்துள்ளார்.

சில நாள்களுக்கு முன்  சஞ்சீவனின் உடல்நிலை பற்றி அறிந்துகொள்ள சில அதிகாரிகள் செர்டாங் மருத்துமனை வந்ததாக ராமகிருஷ்ணன்  மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“அவர்கள் மருத்துவர்களைச் சந்தித்துப் பேசினார்கள்”, என்றாரவர்.

மகன் சுடப்பட்ட விவகாரத்தில் நெகிரி செம்பிலான் போலீசாருக்கு சம்பந்தம் இருக்கலாம் எனத் தாம் வெளிப்படையாக சொல்லியிருந்தும் அம்மாநில போலீசார் தொடர்ந்து  விசாரணையில் ஈடுபடுவதைக் காண வருத்தமாக இருக்கிறது என்றாரவர்.