குண்டர் கும்பல்களுக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களின் ஆதரவு உண்டு

1 gangமுக்கிய அரசியல் புள்ளிகள் பலர் குண்டர் கும்பல்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்; சிலர் அக்கும்பல்களின் ஆலோசகர்களாகவும் உள்ளனர்.

இதனைத் தெரிவித்த சின் சியூ டெய்லி, 10 இரகசிய குண்டர் கும்பல்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடவிருக்கும் உள்துறை அமைச்சு இரகசியக் கும்பல்களுக்கு எதிராக “போர்” தொடுக்க ஆயத்தமாகி வருகிறது என்று அறிவித்துள்ளது.

“குண்டர் கும்பல்களில் இந்திய குண்டர்கள்தான் முரட்டுத்தனமிக்கவர்கள். அவர்கள் அங்காடி வியாபாரிகள், இன்னிசை விடுதிகள் முதலியோரிடம் பாதுகாப்புப் பணம் பெறுகிறார்கள். துப்பாக்கியால் சுடுவோராகவும் மாறி வருகிறார்கள்.

“மலாய்க்கார குண்டர்கள், கட்டுமான இடங்களைக்  ‘கவனித்துக்கொண்டு’ வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள்”.

சீனக் குண்டர் கும்பல்கள்,  சட்டவிரோத தொழில்களில் குறிப்பாக கள்ள டிவிடி விற்பனை, சூதாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல், விபசார நடவடிக்கைகள், கரோக்கே விடுதிகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றது கூறியது.