அரசாங்கம் 2014 வரவு செலவுத் திட்டத்தில் ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை வரியை அறிமுகம் செய்தாலும் அந்த வரியை எதிர்ப்பதில் தாம் உறுதியாக இருப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சொல்கிறார்.
“நமக்கு ஏன் ஜிஎஸ்டி தேவை ? வருமானத்தை அதிகரிப்பதற்காக. ஊழல், விரயம் போன்ற மிக முக்கியமான பிரச்னைகளுக்கு முதலில் தீர்வு காணுங்கள்,” என அன்வார் இன்று காலை பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
4 விழுக்காடு வரி விகிதத்துடன் ஜிஎஸ்டி அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என நிதி அமைச்சு ஏற்கனவே கோடி காட்டியுள்ளது.