பிஎன் -னுடன் கலந்துரையாடல் நடத்த அன்வார் முன் வருகிறார்

anwarமுக்கியமான தேசியப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துக்கும் எதிர்த்தரப்புக்கும் இடையில் திறந்த கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

“திறந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நாங்கள் யோசனை தெரிவிக்கிறோம்.  அது வெளிப்படையாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்,” என அவர் இன்று  காலை பிகேஆர் தலைமையகத்தில் மெர்தேக்கா உரையை நிகழ்த்திய பின்னர்  கூறினார்.

என்றாலும் கலந்துரையாடாலுக்கான அறைகூவல் ஒற்றுமை அரசாங்கத்துக்கான  யோசனையைப் போன்றதல்ல என அன்வார் சொன்னர்.

“எந்த முறையான ஜனநாயகத்திலும் இது போன்ற கலந்துரையாடல்கள் நிகழ்வது  வழக்கமாகும்,” என்றார் அவர்..