ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்களில் சந்தேகம் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நவநீதம்பிள்ளை அம்மையார் தனது இலங்கை விஜயத்தின் இறுதியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இலங்கை ஏதேச்சாதிகார நாடாக மாறிவருவதாக கூறியதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
அரசாங்கம் என்ற வகையிலும் பிரஜைகள் என்ற முறையிலும் நியாயமான சந்தேகம் ஏற்படுகிறது. அவர் நாட்டின் ஜனநாயக அம்சங்களை மறைத்து வெளியிட்ட கருத்தாகவே அதனை கருத முடியும் என்றார்.
மானங்கெட்ட , ஈனங்கெட்ட பிறவிகளே! உண்மையை சொன்னால் உறுத்துதோ ? சிங்கள கொளையர்களே , எவண்டா ஒதுக்குவான் நாங்கள்தான் தமிழர்களை கொன்று குவிதோம்மென்று? ஆப்பு வரபோகுது என்ற பீதியோ ?
ஏன்டா இப்படி பச்சை பொய் சொல்லியே உலகத்தையே எமாத்துரிங்கே? உண்மை வெல்லத்தான் போகுது.