பினாங்கு இண்ட்ராப் தலைவர் கே.கலைச்செல்வம், இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கான ஐந்தாண்டுச் செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏன் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“பிஎன் ஏமாற்றிவிட்டதா?” என்று பலரும் இண்டாராபைக் கேட்கிறார்கள் என்றாரவர்.
“செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் என்ன இடர்பாடு? பிஎன் அல்லது நஜிப் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமலிருப்பது ஏன்? பிஎன் தேர்தலில் வெற்றிபெற நாங்கள் கடுமையாக பாடுபட்டோம்.
“அவர்கள் ஆட்சிக்கு வந்து 100 நாள்களுக்குமேல் ஆகியும் எங்கள் செயல்திட்டம் செயல்படுத்தப்படவில்லை; எங்கள் சமூகத்தின் வாழ்க்கையிலும் எந்த முன்னேற்றமுமில்லை”, என்றாரவர்.
இது என்னடா கேனத்தனமான கேள்வியாயிருக்கு !!! உங்கள் தேவையைத்தான் பி.என் நிறைவேத்திடுச்சே உங்கள் தலைவருக்குப் பதவியை கொடுத்து ! அப்புறம் இன்னும் ஏம்ப்பா இந்த நாடகம்???? ஆமா..ஆமா இப்படிக் கேட்டால்தான் உங்களுக்கும் ஏதாவது கிடைக்கும் ! நல்லா கேளுங்க!!!!!!!!!!!!!!!!!!!
உண்மைதான் . தலைவர் அரசாங்கத்தைப் பார்த்துக் கேக்க வேண்டியக் கேள்வியை இந்த அடிமட்டத் தலைவர்கள் கேக்குறாங்கண்ணா ஏதோ இருக்கு…….
இண்டாராப்கு நல்ல ஆப்பு,
பொய் பொழப்ப PAAருங்கையா
இண்ட்ராப்பின் உண்மைத் தலைவன் உதயா உள்ளே கம்பி எண்ணுகிறார்,போலித் தலைவன் மக்களை நம்மி பணத்தை எண்ணுகிறான்,இதில் யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே,
சூப்பரோ சூப்பர்!!!!!!
விடாமல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டிருங்கள். இல்லையேல், ஆரிய கஞ்சி பழங்கஞ்ஜாகிவிடும்!!!!
பிறகு அடுத்த தேர்தலின் போதுதான் இப்போதைய பிரச்னைக்கு அஸ்திவார (மீட்டிங்) போடுவார்கள்.
நாங்க தலைபாடா அடிச்சி சொன்னோம் ஹிண்ட்ராப் கேட்கவில்லை !100 நாள் என்ன 1000 நாள் கழித்தும் ஹிண்ட்ராப்புக்கு ஆப்புதான் ! பினாங்கு ஹிண்ட்ராப் தலைவர் உண்ணாவிரதம் எடுத்தால் அவரும் பிழைத்துக்கொள்வார் ! உதயா உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் அவனும் நாசக்காரன்தான் !
இந்தியர்களுக்கு ஒரு நல்ல தலைவராக திரு. வேத அவர்கள் விளங்குகிறார்.
ஒரு வேளை அடுத்தத் தேர்தல் வரும் போது இந்தச் செயல் திட்டங்கள் எல்லாம் தமக்குத் தேவைப்படும் – அப்போது ஏதோ ஒன்று இரண்டை நிறைவேற்றலாம் – என்று பிரதமர் நினைக்கிறாரோ!
மூன்று அமைச்சர்கள் சொல்லி விட்டார்கள், பொத்திக் கொண்டு இருக்க முடியாவிட்டால் நடையைக் கட்டுங்கள் என்று. மானம் கெட்டுப் போய் வேதாளம் இன்னும் முருங்கை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கு.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்கான ஐந்தாண்டுச் செயல்திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் அல்ல ஆனால் அரசாங்கம் என்றும் செயல் படுத்தாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.ஆனால் இதனை ஒட்டி கேள்வி எழுப்பும் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..தொடர்வோம் நமது போராட்டத்தை என்றும் எங்கும்..
தமிழன் பேசியே கெட்டான்……. போங்கடா நீங்களும் உங்கள் அரசியல் நாடகமும்….
பொருத்திருங்க rm500 brim 3.0 கிடைக்கும்.