இலங்கை தொடர்பாக நவி.பிள்ளையின் கவலைகள் குறித்து பிரித்தானியா கவனம்

alistair_burt_001ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பாக எழுப்பியுள்ள கவலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயார் பேர்ட் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆணையாளரின் கவலைகள், இலங்கை நாட்டில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நோக்கங்களை இன்னும் நிறைவேற்றவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தனது இலங்கை விஜயத்தில் போது ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இராணுவம் கீழ்மட்ட சிவில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை தனக்கு கவலையளிப்பதாகவும் விவசாயம், கல்வி மற்றும் சுற்றுலாத்துறையிலும் கூட இராணுவத்தின் தலையீடுகள் இருப்பதாகவும் நவநீதம்பிள்ளை கூறியிருந்தார்.

தனியார் நிலங்களில் கையகப்படுத்தப்பட்டு, இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமை, விடுமுறை விடுதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை பற்றிய முறைப்பாடுகளும் கிடைத்தன.

அரசாங்கம் இந்த பிரச்சினையில் இறுக்கமான பிடியை கொண்டிருப்பதால், இந்த பிரச்சினையை தீர்ப்பதில் கடும் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.

சில இராணுவ முகாம்கள் இருக்க வேண்டும், போருக்கு பின்னர், நோய்த்தாக்கம் போன்ற நிவாரணப் நடவடிக்கைகள், மறுசீரைமைப்பு பணிகளுக்கு இராணுவம் தேவை.

பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பவது, வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் அதிகளவில் அக்கறை செலுத்தப்பட வேண்டும்.

பாலியல் துஷ்பிரயோகம் ஒரு சகிப்புதன்மையற்ற செயல் எனவும் இது தொடர்பாக பல அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், பாதுகாப்புச் செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பின் போது, கலந்து கொண்ட இராணுவ உயர் அதிகாரிகளிடம் இந்த விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பியதாகவும் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

TAGS: