ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இறுதியாக எழுப்பியுள்ள இலங்கை தொடர்பான கருத்துக்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகளும் பொதுநலவாய அமைப்பும் கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நவநீதம்பிள்ளை தமது விஜயத்தின் இறுதியில் இலங்கையில் படையினரின் அச்சுறுத்தல், விமர்சனங்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.
இலங்கை அரசாங்கத்தின் கொள்கைள் ஆபத்தானவை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தநிலையில் பொதுமக்கள் அமைதியான முறையில் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று அவர் கூறிய கருத்து கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்று சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் உதவி பணிப்பாளர் பொலி ட்ரஸ்கோட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளுர் விசாரணைகள் உரியமுறையில் நடத்தப்படவேண்டும்.
இல்லையேல் சர்வதேச விசாரணைகள் அவசியப்படும் என்று அவர் கூறியிருப்பதை ஐக்கிய நாடுகளும் பொதுநலவாய அமைப்பும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ட்ரஸ்கோட் வலியுறுத்தியுள்ளார்.