ஓர் அரசியல் கூட்டணியாக தன்னைப் பதிந்துகொள்ள மனுச் செய்த பக்காத்தான் ரக்யாட், தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றங்களைத் தெரியப்படுத்தாத காரணத்தால் அது பதிவு செய்யப்படாமல் இருக்கிறது என சங்கப் பதிவகத் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் கூறினார்.
பக்காத்தான் 2009-இல், கூட்டணியைப் பதிவுசெய்ய விண்ணப்பம் செய்தது. ஆனால், அதன்பின்னர் அதன் இடைக்காலக் குழுவில் ஏற்பட்ட மாற்றங்களைத் தெரியப்படுத்தவில்லை.
“அவர்களின் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் எங்களுக்கு (ஆர்ஓஎஸ்)த் தெரிவிக்க வேண்டும் என்பதைப் பல தடவை சொல்லிவிட்டேன்”, என்றாரவர்.
ஆர்ஓஎஸ் இன்னமும் தகவலுக்குக் காத்திருப்பதாக அப்துல் ரஹ்மான் கூறினார்.
ஏற்ற வேலைக்கு தகுதி இல்லாதவர்கள் ???????????????????????????
வேடிக்கையாக உள்ளது…. பாகாத்தான் முதல் மனு படி பரிசீலிப்பதுதான் ROS சின் வேலை மாற்றங்கள் பற்றி இவர் ஏன் ஆலோசனை கூற வேண்டும்.? வேடிக்கையான வெண்டக்கா PR இன்னும் முறையா மனு செய்ய தெரியாத ரேபோர்மாசி ?
இந்த நாட்டை ஆண்ட UMNO தோற்று வைத்த காலம்முதல் கோயா குட்டி காலம் வரை அது ஒரு ( UMNO ) பதிவு செயப்படாத அரசியல் கட்சி என்பதை எப்படி அறியாமல் இருந்தீர்கள் ? துங்கு ரசாலி குட்டயை குழப்பியதால் உண்மை வெளியானது, ரத்தானது மீண்டு உடனே பதிவானது , அது எப்படி ? அது முடியும்மென்றால் – இது ஏன் முடியாது ? மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் !!