சர்வதேச குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ தீர்வாக அமையும்!- அரசாங்கம்

13vathi thiruththamசர்வதேசம் இலங்கை மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு 13ஏ என்ற தீர்வை பயன்படுத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம், சிறந்த தீர்வாக 13ஏ என்ற சட்டத்திருத்தத்தை கருதுகிறது.

அரசியல் அமைப்புக்குள் மாகாணசபை முறை கொண்டு வரப்பட்டமையை சிலர் வெள்ளை யானை என்று நினைக்கின்றனர்.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாகாணசபை முறை வலுப்பெற வேண்டும் என்று எண்ணுவதாக கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக போராட மாகாண சபைகள் வலுவாக இருக்க வேண்டும்!-  அரசாங்கம்

இலங்கைக்கு எதிரான சர்வதேசம் சமூகத்தின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் ஒரு கருவியாக 13 அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் உயைராற்றிய அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,

13வது திருத்தச் சட்டத்தை பயன்படுத்தி, அரசாங்கம் சிறுபான்மை மக்களின் உரிமைகள் உட்பட அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து வருகிறது என்பதை உலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளை சிலர் வெள்ளை யானை என கருதுகின்றனர்.

சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக போராட மாகாண சபைகளும் வலுவாக இருக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றார்.

TAGS: