நவி பிள்ளையை சந்தித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது – ஜீ.எல். பீரிஸ்

Navaneetham-pillay2ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையை சந்தித்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறாது என இலங்கை அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.

இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்ட தினத்தன்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த நவி பிள்ளை, தன்னை சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.

லண்டனில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸிடம் பிபிசி இதுபற்றி கேள்வி எழுப்பியது.

நவி பிள்ளை தனது முறைப்பாடுகளை அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக முன்வைக்காவிட்டாலும், அவ்வாறு யாரும் அச்சுறுத்தப்பட்டுள்ளார்களா என்று விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜீ.எல். பீரிஸ் கூறினார்.

இலங்கை தொடர்பில் நவி பிள்ளை கொழும்பில் வெளிட்ட கருத்துக்கள் பக்கச்சார்பானவை என்றும் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கை எதேச்சாதிகார பாதையில் செல்வதாக நவி பிள்ளை கூறியுள்ளமை அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் அமைச்சர் கூறினார். -BBC

TAGS: