இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகளின் வருடாந்த பணிகளுக்கான அறிக்கையில் இலங்கையும் குறிப்பிடப்படடுள்ளது.
ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனின் அறிக்கை இன்று ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.
அதில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை கொண்டு அங்குள்ள பிரச்சினைக்கான தீர்வைக் காண விரும்புவதாக பான் கீன் குறிப்பிடடுள்ளார்.
இலங்கையின் இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக உரிய முறையில் செயற்படாது தோல்வி கண்டது என்று ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பான் கீ மூன் தமது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த பணிக்காக ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொறுப்புக்கூறலை பாதுகாத்தல் என்ற அடிப்படையில் செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட தூக்கத்திற்கு பிறகு விழித்து அறிக்கை விடுகிறார்.இவர் தூங்கும்போது பல லட்ச அப்பாவி ஈழமக்களை இலங்கை ராணுவம் இந்தியா என்ற துரோகியின் ஆதரவால் ,நிரந்தர மாக தூங்க வைத்துவிட்டனர்.அங்கே தமிழ் நாட்டில் கருணாநீதி என்ற ஒரு …. சுயநலத்துக்காக தூங்கியதை உலக தமிழர்கள் மறக்க மாட்டார்கள்.