இலங்கைக்கு இரண்டு போர்க்கப்பல்களை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையோரப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த கப்பல்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரண்டு கப்பல்களும் கோவாவை தளமாகக்கொண்ட கோவா சிப்ட்யாட் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டவையாகும்.
இந்தநிலையில் இந்த இரண்டு கப்பல்களும் 2017 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன.
இலங்கையுடன் பாதுகாப்பு தொடர்பான உறவுகளை இந்தியா குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ள நிலையிலேயே இந்த கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன.
சிங்கள அரசும் – இந்திய மத்திய அரசும் கைகோர்த்துக்கொண்டு தமிழ் மக்களை ஓரங்கட்டி வருகிறது ! இன்னும் சொல்லப்போனால், தமிழ் நாட்டை மதிக்கவே இல்லை . புலிகள் தனிநாடு கேட்டு போராடியதற்கு என்ன காரணமோ அதே காரணத்திற்க்காக ஏன் தமிழ் நாடு தனி நாட்டை கோரக்குடாது ??? பதிய அரசிடம் கையேந்தி , மண்டியிட்டு கிடப்பதை விடுத்தது “தனி தமிழ் நாடு” உருவாகவேண்டும் !