ஆப்கானில் தாக்குதல்: பாக். தீவிரவாத குழுக்கள் தயார்!

muslim terrorist01இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு படைகள் வாபஸ் பெற்ற பின்னர் மிக‌ பெரிய தாக்குதல் நடத்த பாக்.,தீவிரவாத குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக சமூக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் இயங்கி வந்தன. பின்னர் நிலைமை சீரடைய துவங்கியதும் வரும் 14-ம் ஆணடிறகுள் அனைத்து வெளிநாட்டு படையினரும் முற்றிலுமாக விலக்கி கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன் ஒருபகுதியாக நேட்டோ படைகள் படிப்படி யாக ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில் தற்போது எஞ்சியிருக்கும் குறைந்த பட்ச நேட்டோ படை வீரர்கள் ஆப்கான் ராணுவத்தினருக்கு போர் பயற்சி யளித்து வருகின்றனர்.

ஆப்கான் -பாகிஸ்தான எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள சுமார் 2 ஆயிரத்து 600 கி.மீட்டர் பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தயாராக காத்திருக்கின்றனர் என சமூக ஆய்வாளர் மன்சூர் மெஹசூத் தெரிவித்துளளார்.

பாகி்ஸ்தானின் மேற்குபகுதியை சேர்ந்த வாஸிரிஸ்தான் பகுதியில் மலைப்பாங்கான இடங்களில் பழங்குடியினர் வசி்க்கும் பகுதிகளில் சுமார் 150 தீவிரவாத குழுக்கள் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த குழுக்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாகாணங்களை ‌சேர்ந்தவர்களே உள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தாலிபன் தீவிரவாதிகள் பாக் தீவிரவாதிகளிடம் உதவி கேட்காவிட்டாலும் பாக்., தீவிரவாத குழுக்கள் தானாக முன்வந்து போரிடுவது முற்றிலும் உண்மை என சமூக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.Click Here