முன்னாள் போராளிகள் 100 பேர் நாளை விடுதலை

poralikal_001புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 100பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகர் விஜேதிலக இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஒரு வருடகாலம் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், நாளை சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட காலத்தில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திறமைகளை வளர்த்துக் கொள்ள அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. மேலும் அவர்கள் பயிற்சிகளை முடித்துக் கொண்டபின் அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

அவர்கள் அனைவரும் 100 வீதம் புனர்வாழ்வு பெற்றுவிட்டனர் எனக் குறிப்பிட்டார்.

கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து இதுவரையில், 11,631 புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்போது புனர்வாழ்வு பயிற்சியில் ஈடுபட்டு வரும் 247 பேர் அடுத்த வருடம் விடுவிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: