உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, இரகசிய சங்கங்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை, அம்னோ தேர்தலுக்குமுன் தம் தோற்றத்தை உயர்த்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட ஒரு விளம்பரத் தந்திரம் என்று கிண்டலடித்துள்ள பிகேஆரைச் சாடினார்.
“அப்படிப்பட்ட மலிவு விளம்பரம் எனக்குத் தேவையில்லை”, என இன்று காலை பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் சொன்ன கருத்துக்கு அவர் எதிர்வினை ஆற்றினார்.
குண்டர் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கையை போலீஸ் அறிவித்ததையும் இரகசிய சங்கங்களின் பெயர்ப்பட்டியலை அமைச்சின் தலைமைச் செயலாளர் வெளியிட்டதையும் அஹ்மட் ஜாஹிட் சுட்டிக்காட்டினார்.
“நான் அறிவிக்கவில்லை, ஏனென்றால் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை”, என்றவர் எரிச்சலாகக் குறிப்பிட்டார்.
இவரே ஒரு lalang இவரு ரொம்ப பேசறாரு .
எல்லாம் சரிதான் சாமியோ! கோலாலம்பூர் CID தலைவர் இந்த பெயர் பட்டியலை பற்றி ஒண்ணுமே தெரியாது, போலீசுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல, KDN க்கு எப்படி இந்த பட்டியல் கிடைத்தது என்று கூறுகிறாரே , அது எப்படி ?? KDN குள்ளேயே ஒரு தனி “போலிஸ்” ராஜ்ஜியம் உள்ளதோ ? வெறும் “மட்சிங்க” பேர்மட்டும் இருக்கு , சடையன் இல்லை ? வலயங் கட்டியும் இல்லையே ?? எப்படி ??