தேர்தல் முடியும் வரை இராணுவத்தை பாசறைக்குள் இருக்கச்செய்யுங்கள்- சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

mahinda_sampanthanவடக்கு மாகாணசபைத் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது

இது தொடர்பில் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள இந்த கடிதத்தில்,  தேர்தல்களின் போது இராணுவம் தமது பாசறைகளில் தங்கியிருப்பதை உறுதிப்படுத்த வேண்டு;ம் என்று சம்பந்தன் கேட்டுள்ளார்.

வடக்கின் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் தற்போது தேர்தலின் போது இராணுவம் அரசாங்க வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தமது பல வேட்பாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

எனவே தேர்தல் வாக்களிப்புகள் முடியும் வரையிலாவது இராணுவத்தை தமது பாசறைகளுக்குள் முடக்குமாறு சம்பந்தன், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

TAGS: