குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள கதாபாத்திரம் சூப்பர் மேன்.
இவரைப் போன்று சாகசங்களை செய்ய வேண்டும் என பலரும் விரும்புவர்.
இதுபோன்று முயற்சி செய்தவர் தான் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்பர்ட் சாவேஸ்(வயது 35).
இவருக்கு 5 வயதாக இருக்கும் போது சூப்பர் மேன் கதாபாத்திரங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்துள்ளார்.
பின் அதுபோன்றே தானும் மாற வேண்டும் என்பதற்காக இதுவரையிலும் 4,400 பவுண்டுகளை செலவழித்துள்ளார்.
மேலும் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது, சூப்பர்மேன் ஆடைகளை உடுத்தியபடியும், தலையில் ஜெல் தடவி தனித்துவமாக தெரியும் வகையில் செல்வதும் வழக்கமாம்.
குறிப்பாக இதற்கென்று பிரத்யேக அறுவை சிகிச்சைகளையும் செய்து கொண்டுள்ளார்.
அதாவது, மூக்கு அறுவை சிகிச்சை, தோல் வெண்மை நிறமாக மாறுதல், தாடை மறுசீரமைப்பு, உதடு சமன்செய்தல் மற்றும் தோள்கள் சீரமைப்பு சிகிச்சை உட்பட 13 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 30 வருடங்களாக சூப்பர்மேன் போன்று தன்னை மாற்றி கொண்டு வந்துள்ள இவர், அதனுடன் சிறு குழந்தைகளுக்கு நல்ல கதைகளை போதிக்கும் பணியை மேற்கொள்வதை தனது நோக்கமாகவும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.