அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த இராஜதந்திரக்களமாக ஐ.நா மனித உரிமைச்சபை மாறி வரும் நிலையில், நடைபெற்று வரும் மனித உரிமைச்சபையின் 24வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான கடும் குற்றச்சாட்டுக்களை அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் பலவும் முன்வைத்துள்ளன.
Lawyers Rights Watch, Human Rights Watch, International Service for Human Rights , Amnesty International , Liberation ஆகிய மனித உரிமை அமைப்புகள் சிறிலங்காவுக்கு எதிராக அணிவகுத்து நின்றதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா விவகாரங்களுக்கான பிரதிநிதி சுகிந்தன் முருகையா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களை சந்தித்திவர்கள் சிறிலங்கா படையினரால் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் உட்பட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறைகள், முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல்கள், அனைத்துலக விசாரணைக்கா அவசியம் என சிறிலங்காவில் தொடர்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் பலவும் குற்றஞ்சாட்டியிருந்தன.
குறிப்பாக உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவேல் அடிகளாரும், Lawyers Rights Watch Canada அமைப்பினைச் சேர்ந்த கரி ஆனந்தசங்கரி அவர்களும், இலங்கைத்தீவில் தமிழர்கள் சந்தித்து வருகின்ற மனித உரிமை நெருக்கடிகள் குறித்து சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தனர்.
சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை வலியுறுத்திய Amnesty International, சிறிலங்காவின் காவல்துறையினரால் நடந்தேறும் வன்கொடுமைகள் குறித்து பிரஸ்தாபித்திருந்தது. இதேவேளை நீதி தோற்றுப்போன நாடாக சிறிலங்காவினை Amnesty International குறிப்பிட்டிருந்தது.
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைவரத்தினை கையாள்வதற்கு அனைத்துலக பொறிமுறை அவசியம் குறித்து கருத்துரைத்த Human Rights Watch, மனித உரிமைகளுக்கான சுதந்திரமான வெளியற்ற நாடாக சிறிலங்கா உள்ளதென்பதனை சுட்டிக்காட்டியிருந்தது.
இலங்கையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களை சந்தித்திவர்களை சிறிலங்கா படையில் அச்சுறுத்த்திய விடயத்தினை International Service for Human Rights வன்மையாக கண்டித்திருந்தது.
ராஜபக்ஷே விஷயத்தில் ,சனீஸ்வரன் இப்போதுதான் 7 1/2 காட்ட தொடங்கி இருக்கிறான் !
இப்படியே வருஷம் முழுவதும் பேசிக்கொண்டே இருங்கடா, ஆனால் எந்த முடிவும் எடுக்காதேங்கடா!!!!!!
இலங்கையை ஆண்ட இராவணன் அழிந்தது பெண்ணாலே ;
அதே இலங்கை ராச்சசன் ராஜபக்சே அழிவது தமிழர்களின்
சாபத்தாலே .