ஐ.எஸ்-யின் நடுங்க வைக்கும் காணொளி: 10 வயது சிறுவனின் வெறிச்செயல்!

is_horror_001சிரியாவில் உளவாளிகளை 10 வயது சிறுவன் ஒருவன் சுட்டுக் கொல்லும் காணொளியை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் மண்டியிட்டு இருக்கும் இரண்டு பேரை, 10 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றும் காட்சி இடம் பெற்றிருந்தது.

சிறுவனால் பலியான இருவரும், ரஷ்யாவை சேர்ந்த உளவாளிகள் என கூறப்படுகிறது.

மேலும் துப்பாக்கிச்சூட்டை நடத்துவதற்கு முன்பு அச்சிறுவன், நான் கஜகஸ்தானை சேர்ந்தவன் என்றும் மத நம்பிக்கை அற்றவர்களை கொல்ல விரும்புகிறேன் எனவும் பேசியுள்ளான்.

-http://world.lankasri.com

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=FnyNBklNZ2M

TAGS: