கூட்டரசு நீதிமன்றம், முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ அவரது ஊழல் வழக்குத் தீர்ப்புக்கு எதிராக செய்திருந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து அவருக்கு ஒராண்டுச் சிறைத் தண்டனை விதித்தது.
சிறைத் தண்டனைக்குப் பதிலாக அந்த 50-வயது பல் மருத்துவர் இலவச பல் சிகிச்சை அளிப்பதன்வழி சமூகச் சேவை செய்ய முன்வந்ததையும் கூட்டரசு நீதிமன்றம் ஏற்கவில்லை.
“குற்றம் கடுமையானதென்றால் தண்டனை அதனைப் பிரதிபலிக்க வேண்டும்”, என மலாயா தலைமை நீதிபதி சுல்கிப்ளி அஹ்மட் மஹினுடின் தம் தீர்ப்பில் கூறினார்.
சமூகச் சேவையெல்லாம் இளம் குற்றவாளிகளுக்குத்தான் என்றார் நீதிபதி சுல்கிப்ளி.
“இங்கு சமூகச் சேவை போதாது. அவரது செயலால் அரசுப் பணியாளர்கள் மீதிருந்த நம்பிக்கை குறைந்துள்ளது”, என்றாரவர்.
























இவரது செயலால் அரசு பணியாளர்கள் மட்டுமின்றி அம்னோ அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்கள் (பிரதமர் உட்பட) மீதிருந்த கொஞ்ச நஞ்ச மக்களின் நம்பிக்கையும் “2.6 பில்லியன் பிரதமரின் நன்கொடை”-யால் சுக்கு நூறாகி விட்டது என்பதே உண்மை.
”குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி
கொள்வதென்பதேது.யாருடை பல்லையும் புடுங்க வேண்டாம். மணி அடிசா சோறு கொஞ்ச நாள் உல்லே இருந்துட்டுவா,உன் நண்பன் உனக்கு துனையா ( நம்பிக்கை நாயகன்) வருவான்.
உண்மையிலேயே ஊழல்வாதிகளை எல்லாம் தேடி உண்மையான நீதிக்கு முன் நிருத்தமுடியுமானால் பாதிக்குமேல் தேசிய முன்னணி உள்ளே இருக்க வேண்டும்.
சரிதான் ஆனால் தண்டனை குறைவாக இருக்கிறதே….
இத்தகைய தண்டனை உழலை ஊக்குவிப்பதாக இருக்கிறதே…
விதை விதைத்தவன் அறுவடை செய்து தானே ஆகவேண்டும்…?
சார்டின் திருடியவனுக்கு 3 வருஷம் சிறை கோடியை திருடனுவனுக்கு 1 வருஷமா ! போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும்
சார்டினை திருடியவனுக்கு 10 வருடம் சிறை .கோடி கணக்கில் ஊழல் செய்தவனுக்கு 1 வருடம் சிறை . நல்ல தீர்ப்பு டா ?
பதவி வெறியில் இடித்த கோயில்கள் எத்தனை ? இது அதற்கு தண்டனையா ?
தீர்ப்புக்களையும் விலைகொடுத்து வாங்க முடியும் என்பது இன்றைய அவல நிலை
அரசியல்வாதிகளின் ஊழலுக்கு ஒரு நாள் சிறை சென்றாலுமே அது அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்த மாதிரி. இங்கே 12 மாதங்கள் என்பது அவரைப் பொறுத்த மட்டில் 12 வருடங்களுக்கான பலனை அனுபவித்து விடுவார். இருந்தாலும் பராவில்லை நன்னடத்தை அடிப்படையில் 9 மாதத்தில் வெளியே வந்து விடலாம். கூட்டிக் கொடுத்தவர்களே மாட்டியும் விட்டு விட்டார்களே!
அம்னோ “குற்றவாளி”-களுக்கு பகலில் சிறையில் சிறைவாசம், இரவில் தலைநகரில் உல்லாசம் ! என்பதுதான் உலகமே அறிந்த விஷயமாயிற்றே !
சரியாகச் சொன்னீர், தேனி! ஒரு நாள் தான் சிறை தான் என்றாலும் அது நூறு நாளுக்குச் சமம்!
விலை கொடுக்காமலும் தீர்ப்புகள் வழங்கப்படும் -அரசியல் செல்வாக்கு இருந்தால்.
முட்டை திருடினால் 10 ஆண்டுகள் .
…………………????
அப்துல் ரஹீம் 3 மாதம் ஜெயிலில் இருந்தாரா தெரியவில்லை ஐய்யயோ 1 மலேசியா!