தலிபான்களின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்

Taliban-Fighters1ஆப்கானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கடுமையான சண்டை நடக்கும் சங்கீன் நகரில் தலிபான் தளபதி ஒருவரும், அவரது போராளிகள் 50 பேரும் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அந்த பகுதியை மீளக் கைப்பற்றும் முயற்சியாக ஆப்கான் அரசாங்க படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்கள் இரண்டு தடவை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட தலிபான் தளபதியான முல்லா நஸீர், தலிபான்களின் தலைவரான முல்லா அக்தார் மன்சூரின் நெருங்கிய சகா என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுடைய படைகள் இன்னமும் அந்த மாவட்டத்தை தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், ஒரு இராணுவ தளத்தில் உள்ள அரசாங்க படையினரின் பிரிவு ஒன்றை சுற்றி வளைத்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. -BBC

TAGS: