சீனா, ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு குழந்தைகளுக்கு மிருகத்தனமாக பயிற்சியளித்து வருவது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூபேவில் தடகள வீர்ர்களுக்கென ஒரு பள்ளி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கிட்டதட்ட 3 முதல் 9 வயதுடைய 150 குழந்தைகளுக்கு மிருகதத்தனமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
https://youtu.be/-T2PCAxL0gY
ஒலிம்பிக்கல் சீனா அதிக பதக்கங்களை வெல்ல வேண்டும் என சிறுகுழந்தைகளுக்கு மனித உரிமைகளை மீறும் வகையில் மிக கடினமான பயிற்சி அளித்து வருகிறது.
இப்பள்ளியில், ஆண்டிற்கு 12,600 மணிநேரம் தீவிர பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.
இது LITTLE BIG DREAM என்ற தலைப்பில் ஆவணப்படமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் உலக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-http://news.lankasri.com
























