வாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள்

வாட்சாப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் ஹேக்கர்கள் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்சாப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, ‘திறன்பெற்ற ஹேக்கர்’ இதை மேற்கொண்டதாக அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலிலிருந்து ஏனைய வாட்சாப் பயன்பாட்டாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று வாட்சாப் நிறுவனம் வெளியிட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாட்சாப் செயலியின் புதிய பதிப்பை உடனடியாக நிறுவுறுமாறு தனது 1.5 பில்லியன் பயன்பாட்டாளர்களையும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. -BBC_Tamil

TAGS: