ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், தற்போதைய மாதக் கட்டணமான S$2-க்கு பதிலாக மாற்றியமைக்கப்படுகிறது.
சிங்கப்பூர் வழங்கும் ஏசியான் பொதுச் சேவை வாகன அனுமதிகள் (Asean public service vehicle permits) மற்றும் முறையான பொதுச் சேவை வாகன உரிமங்கள் (public service vehicle licences) கொண்ட மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகள் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தாண்டிய சேவைகளை இயக்க முடியும்.
சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியப் பதிவு பெற்ற டாக்சிகளுக்கு (Taxis) 2027 ஜனவரி 1 முதல் ஒரு பயணத்திற்கு 15 சிங்காப்பூர் டாலர் (சுமார் 48 மலேசிய ரிங்கிட்) புதிய நுழைவுக் கட்டணமாக விதிக்கப்படும் என்றும், இது தற்போதுள்ள மாதாந்திரக் கட்டணமான 2 சிங்காப்பூர் டாலருக்குப் பதிலாக அமையும் என்றும் சிங்கப்பூர் அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இயக்கப்படும் மலேசியப் பதிவு பெற்ற டாக்சிகளுக்கும், சிங்கப்பூர் பதிவு பெற்ற டாக்சிகளுக்கும் இடையிலான செலவு இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டே, ஆசியான் பொதுச் சேவை வாகன அனுமதிகளில் (PSVPs) இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நிலப் போக்குவரத்து வாரியம் (LTA) இன்று தெரிவித்துள்ளது.
முறையான பொதுச் சேவை வாகன உரிமங்கள் (PSVLs) மற்றும் நிலப் போக்குவரத்து வாரியத்தால் (LTA) வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஆசியான் பொதுச் சேவை வாகன அனுமதிகளைக் (PSVPs) கொண்ட மலேசியப் பதிவு பெற்ற டாக்சிகள் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே எல்லை கடந்த சேவைகளை இயக்க அனுமதிக்கப்படும்.
“எல்லை கடந்த பயணங்களுக்கு முறையான காப்பீட்டுப் பாதுகாப்பு உள்ளதால், பயணிகள் உரிமம் பெற்ற டாக்சிகளை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று பெர்னாமா (Bernama) செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்து ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் பயணிகளுக்குப் போதிய பாதுகாப்போ அல்லது இழப்பீடு பெறுவதற்கான வழிகளோ இருக்காது என்பதால், முறையான காப்பீடு இல்லாத உரிமம் பெறாத வாகனங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் நிலப் போக்குவரத்து வாரியம் பயணிகளை எச்சரித்துள்ளது.
“பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், சட்டவிரோத புள்ளி-க்கு-புள்ளி (point-to-point) போக்குவரத்துச் சேவைகளுக்கு எதிராக நிலப் போக்குவரத்து வாரியம் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,” என்றும் அது மேலும் கூறியுள்ளது.
























