நேற்று நடத்தப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளில், சுமார் ரிம 303,400 மதிப்புள்ள போதைப்பொருட்கள், வாகனங்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செபெராங் பேராய் தெங்கா காவல் துறைத் தலைவர் நிக் அமினுத்தீன் ராஜா அப்துல்லா கூறுகையில், முதல் சோதனையின்போது சமையலறை அலமாரியில் இருந்த ஒரு இரும்புப் பெட்டிக்குள் இரண்டு புகைக் குண்டுகளை காவல்துறையினர் கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.
நேற்று பினாங்கில் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளின் போது, ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், இரண்டு புகை குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
புக்கிட் மெர்தாஜாமில் உள்ள தாமான் கெமிலாங் இந்தா பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 47 வயதுடைய ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில் 46 வயதுடைய ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
“சமையலறை அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ஒரு இரும்புப் பெட்டிக்குள் இரண்டு புகை குண்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்,” என்று செபராங் பேராய் தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் நிக் அமினுத்தீன் ராஜா அப்துல்லா தெரிவித்தார்.
மேலும், காவல்துரையினர் ஹெராயின், மெத்தாம்பெட்டமைன் மற்றும் கஞ்சா என சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களையும், அவற்றை பொதியிடவும் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் கைப்பற்றினர்.
அத்துடன், மூன்று கார்கள், ஐந்து மோட்டார் சைக்கிள்கள், மூன்று தங்க மோதிரங்கள் மற்றும் ரிம 5,700 ரொக்கம் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரிம 303,400 என மதிப்பிடப்பட்டுள்ளது.
























