நேற்று இரவு புத்ராஜெயா, ஜாலான் பெர்சியாரான் செலாத்தானில் கார் ஒன்று வழித்தடம் மாறியபோது இரண்டு மிதிவண்டி ஓட்டிகள் மீது மோதியதில் அவர்கள் இருவருமே உயிரிழந்தனர்.
இது குறித்து புத்ராஜெயா போலீஸ் தலைவர் ஆய்டி ஷாம் முகமது கூறுகையில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஓட்டி வந்த அந்த கார், நடு வழித்தடத்திலிருந்து இடது வழித்தடத்திற்கு மாறியபோது, இரவு சுமார் 10.15 மணியளவில் இந்த இருவர் மீதும் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
40 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு பலியாளர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது, என்றும் அவர் கூறினார்.
இந்த வழக்கு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்ததற்காக, சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் தெரிந்த சாட்சிகள் யாராவது இருந்தால், விசாரணைக்கு உதவ முன்வருமாறு ஆய்டி கேட்டுக்கொண்டுள்ளா
-fmt
























