பனிப்புகை காரணமாக பிரதமரின் தேசிய தின உரை நிகழும் இடத்தில் மாற்றம்

தற்போதைய பனிப்புகை சூழ்நிலை காரணமாக, தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஆற்றும் உரைக்கான இடம், கோலாலம்பூரில் உள்ள மெர்டேகா சதுக்கத்திலிருந்து புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்திற்கு மாற்றப்படும்.

தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டும், விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வசதியை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சகத்தின் 2026 தேசிய தினம் மற்றும் மலேசியா தின கொண்டாட்டப் செயற்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இடமாற்றம் செய்வதனால் 2026 தேசிய தின கொண்டாட்டத்தின் உள்ளடக்கமோ அல்லது அதன் உணர்வோ பாதிக்கப்படாது, ஆனால் நிகழ்வை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் வசதியான சூழலில் நடத்துவதை உறுதி செய்வதற்கான ஒரு பொறுப்பான நடவடிக்கை இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் பனிப்புகை சூழ்நிலையையும் காற்றின் தரத்தையும் அவ்வப்போது தொடர்ந்து கண்காணிக்கும், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய தின அணிவகுப்பு குறித்த முடிவுகள், தற்போதைய நிலைமையின் மதிப்பீடு மற்றும் சுகாதார அமைச்சகம், சுற்றுச்சூழல் துறை, வானிலை ஆய்வுத் துறை ஆகியவற்றின் ஆலோசனைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

-fmt