‘இலங்கை நடவடிக்கைகளால் ஏமாற்றம்’ – பிளேக்

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நிறைவேற்றாமை, வடமாகாண தேர்தலை தள்ளிப் போட்டு வருவதல் ஆகியவை போன்ற நடவடிக்கைகளின் மூலம் இலங்கை குறித்து தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசுத்துறையின் துணைச் செயலர் றொபர்ட் பிளேக் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸின் வெளியுறவு குழுவின்,…

ஒபாமா மனைவி ஆடையை மாற்றம் செய்து ஒளிபரப்பிய ஈரான் ‘டிவி’

நியூயார்க்: ஆஸ்கார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியின் ஆடை வடிவத்தை, ஈரான் தொலைக்காட்சிகள் மாற்றம் செய்து ஒளிபரப்பியது. அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், அமெரிக்க அதிபரின் மனைவி மிச்சேல் ஒபாமா பங்கேற்றார்.…

வேண்டி வேண்டிட வேண்டும்…! (மாறன்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

கோல்கட்டா மார்க்கெட்டில் தீவிபத்து: 18 பேர் உடல் கருகி பலி

கோல்கட்டா: கோல்கட்டாவின் சந்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கோல்கட்டாவின் சீல்டாக் பகுதியில் சூர்யாசென் என்ற பெயரில் மார்க்கெட் மற்றும் கோடவுன் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் பகுதியில்…

கியூபாவில் முடிவுக்கு வருகிறது கெஸ்ரோக்களின் ஆட்சி!

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுடன் அதிபர் பதவியிலிருந்து விலகப்போவதாக கியூபாவின் அதிபர் ரோல் கெஸ்ரோ அறிவித்துள்ளார். இரண்டாவது முறையாக அந்நாட்டுஅதிபராக தெரிவாகியுள்ள ரோல் கெஸ்ரோவின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு நிறைவடைகின்ற நிலையிலேயே அவர் இவ் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் துணை அதிபராக மிகுவெல் டயஸ் அந்நாட்டின்…

காமன்வெல்த் அகப்பக்கத்திலிருந்து இலங்கையின் இலச்சினை நீக்கப்பட்டுள்ளது

காமன்வெல்த் அமைப்பு தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் இதுவரை காட்சிப்படுத்தியிருந்த 'CHOM 2013, SriLanka' இலங்கையின் அனுசரனை இலச்சினையை நீக்கிவிட்டு, 'CHOGM 2011 , AUSTRALIA" என்ற இலச்சினையை காட்சிப்படுத்தியுள்ளது. காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கடந்த பெப்ரவரி 10-13 தேதிகளில் இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன்போது, திட்டமிடப்பட்டுள்ள…

வேளாங்கன்னி நோக்கிச் சென்ற சிங்களவர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்

தமிழகத்தில் வேளாங்கன்னி நோக்கிப் பயணித்த இலங்கையர்கள் சிலர் திருவாரூர் மாவட்டத்தில் வைத்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சிங்களவர்கள் 75 பேர் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக 'த ஹிந்து' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர்கள் வேளாங்கன்னி நோக்கிச் செல்வதால் ஏற்படக்கூடிய மோதல் நிலைமையை தவிர்க்கும் நோக்கிலேயே இந்திய போலிஸார் இந்த…

தீவிரவாத தாக்குதல்: உலக அளவில் இந்தியாவுக்கு 4ம் இடம்!

டெல்லி: தீவிரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் அடிக்கடி நிகழ்கிறது. தாக்குதலை தடுக்க எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஏதாவது ஒரு நகரத்தில் தாக்குதல் நடைபெறுவதும், பலநூறு உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காஷ்மீரோ, கோவை மாநகரமோ குண்டு வெடிப்புகளுக்கு இலக்காகிக் கொண்டுதான் இருக்கிறது. நாடாளுமன்றத்தின் உள்ளேயே கூட தீவிரவாதிகள்…

‘நோ பயர் ஸோன்’ படத்தை ஜெனிவாவில் திரையிட இலங்கை எதிர்ப்பு

கொழும்பு: சனல் 4 தயாரித்துள்ள 'நோ பயர் ஸோன்' ஆவணப்படத்தை ஐ.நா மனிதஉரிமை அவையில் திரையிட இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இறுதிக் கட்ட போரில் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி உலகிற்கு தெரிவிக்கும் வகையில் நோ பயர் ஸோன் என்ற ஆவணப்படத்தை சேனல் 4 தயாரித்துள்ளது. இந்த படம்…

தூய்மையான ம.இ.கா தேவை! ஒரு கிளைத் தலைவரின் ஆதங்கம்!

-கணேசன் ஆறுமுகம் அண்மைய காலமாக இந்தியர்களுக்கு ம.இ.கா. தேவை இல்லை என்ற செய்தி காட்டுத் தீ போல மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகின்றது. எதற்கெடுத்தாலும் ம.இ.கா. 55 வருடங்களாக ஒன்றும் செய்ய வில்லை. ஒன்றுமே சாதிக்கவில்லை என்ற பல்லவி பலர் பாடிக் கொண்டும் வருகின்றனர். அவர்களுக்குப் பதில் தருவதற்கு…

இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் பரபரப்பு!

கோலாலம்பூரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன் நேற்று (26.03.2013) மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட மக்கள் முயன்றதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விடுதலைப்பு புலிகளின் தலைவர் மேதகு வே.…

தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை

தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் (Water Fountain, Brickfields) நடைபெறவுள்ளது. அதில் அனைவரையும்  கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல்…

இந்த நஜீப்போட தொல்லை தாங்க முடியல முருகா!

அண்மையில 'நம்நாடு' தினசரியில் இப்படி ஒரு தலைப்புச் செய்தி முருகா. 'பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், கச்சாங் பூத்தே லைசென்ஸ் கூட கிடைக்காது'. இப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல. நம்ம ஹிண்ட்ராப் உதயகுமார். அவர் சமீப காலமா இப்படிப் பல அறிக்கைகள் விட்டாலும் அது பாரிசான் அரசாங்கத்தையும் சாடியே வருகிறது.…

இலங்கை இனப்படுகொலை குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் : TGTE

இலங்கைத் தீவினை மையப்படுத்திய அனைவரினது பார்வையினையும் நோக்கியதாகவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான ஓர் அனைத்துலக விசாரணையின் அவசியத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு சவால் மிகுந்த இராஜதந்திரக் களமாக ஐ.நா மனித உரிமை பேரவை அமைந்துள்ள நிலையில்…

சென்னையிலுள்ள இலங்கை தூதரகம் முற்றுகை; டெசோ கூட்டத்தில் முடிவு!

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று (25.02.2013) காலை தொடங்கியது. டெசோ அமைப்பின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில், வருகிற 5-ம் தேதி சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு…

போரின்போது மோசமான போர் மீறல்கள் இடம்பெற்றுள்ளன : நவநீதம்பிள்ளை

கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின்போது மோசமான போர் மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நேற்று (25.02.2013) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையின் 22-வது கூட்டத் தொடர் ஆரம்ப உரையின்…

சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வென்றார் டேனியல் டே லூயிஸ்

பிரிட்டிஷ் நடிகர் டேனியல் டே லூயிஸ் மூன்றாவது முறையாக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்று ஹாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய 'லிங்கன்' படத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் அப்ரஹாம் லிங்கனாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. சிறந்த திரைப்படத்துக்கான விருதை 1979ல்…

சிறிலங்கா அரச இணையத்தளங்களை ஊடறுத்து போர்குற்ற காட்சிகள் பதிவேற்றம்!

சிறிலங்கா அரச கட்டமைப்பு இணையத் தளங்கள் மீதான இனந்தெரியாத நபர்களின் ஊடறுப்பு தாக்குதலின் தொடர்சியாக இன்று சிறிலங்கா அரச ஊடக இணையம் ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இணையத்தினை ஊடறுத்துள்ள நபர்கள் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்து என குறிப்பிட்டு அவுஸ்றேலிய தொலைக்காட்சியில் வெளிவந்திருந்த சிங்கள அரசின்…

அனைத்துலக விசாரணை அவசியம்; ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

இலங்கையில் இறதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் தொடர்ந்தும் பொது மக்களும் ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தப்படுகின்றனர். மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. இவற்றுக்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊக்கமும் காரணமாக அமைந்துள்ளது என்றும்…

அதிரவைக்கும் இனப்படுகொலை ஆதாரங்கள்! தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

அரைநூற்றாண்டிற்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழர் இனப்படுகொலையில் பதிவுகள் தொடர்ந்து நம்மை அதிரவைத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த முறை சனல் 4 வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற தலைப்பிலான காணொளியின் அதிர்வுகள் இன்றுவரை நம்மை விட்டு அகலாத நிலையில் புதிய காணொளிகளுடன் மீண்டும் சனல் 4 தனது ஆதாரங்களை முன்வைக்கத்…

போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும்

சிறுவன் பிரபாகரன் பாலச்சந்திரனது படுகொலையினை அனைத்துலக சமூகம் ஒரு தனித்த நிகழ்வாக மட்டும் கொள்ளக்கூடாது. இதன்மூலம் இலங்கைத் தீவில் 2009ம் ஆண்டில் இவ்வாறு பல்லாயிரம் தமிழ்ச் சிறுவர்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளதை நம்புவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேற்குறித்த கொடூர குற்றச்செயல்களுக்கு தலைமை தாங்கி நடத்திய சிங்கள இராணுவ…

நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்கலங்கவைத்த போர்க்குற்ற ஆவணப்படம்!

நேற்று இந்திய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்ட ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம் கண்கலங்கை வைத்துவிட்டதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. (காணொளி) இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையின் வலுமிக்கதொரு சாட்சியமாகவும் சிறிலங்கா அரசுக்கு பெருந்தலையிடியாகவும் இந்த ஆவணப்படம் உள்ளது. அண்ணளவாக 20…

‘ஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது’ – மன்மோகன் சிங்

ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை விடயத்தில் இந்தியா கடந்த தடவை எடுத்த நிலைப்பாட்டையே இந்தத் தடவை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர்…