மாலைதீவின் முன்னாள் அதிபர் நஷீட் மீண்டும் கைது

மாலைதீவின் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டு தலைநகரான மாலேவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் இதன் போது பெருந்தொகையான போலிஸார் அங்கிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும்…

புரட்சியாளரும் வெனிசுலா அதிபருமான சவேஸ் காலமானார்

கார்கஸஸ்: புற்றுநோயால் அவதியுற்ற வெனிசுலா அதிபர் ஹுவே சவேஸ் இன்று காலையில் காலமானார். தென்அமெரிக்க நாடான வெனிசுலா நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார் சவேஸ் (58). புற்றுநோய் தாக்கியதன் காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு ஜுன்…

காணமல் போனோரின் உறவினர்கள் தடுத்து வைப்பு

இலங்கையின் தலைநகர் கொழும்பில்இன்று நடைபெறவுள்ள காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்குபெறவுள்ளவுள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து செல்லவிருந்த மக்களை போலிசார் வவுனியாவில் தடுத்து வைத்திருப்பதாக இந்தப் பயண ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்று காலை 9 மணிக்கு கொழும்பில் ஒன்று கூடுவதற்காக இவர்கள் யாழ்பபாணம்,…

இலங்கை மீதான தீர்மானம் திருப்தி அளிக்கவில்லை : சுரேஷ் பிரேமசந்திரன்…

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் தற்போது இடம்பெற்றுள்ள வாசகங்கள் தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று ஜெனிவா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வாசகங்கள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. இந்த முறை…

படகுப் பயணங்களைத் தவிர்க்குமாறு தமிழர்களுக்கு ஆஸ்திரேலியா வலியுறுத்தல்

இலங்கையிலிருந்து படகுகள் மூலம் புகலிடம் கோரி தமது நாட்டிற்குள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் பகிரங்கமாக அறித்துள்ளது. படகுகள் மூலம் புகலிடம் கோரி சென்றவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள போதிலும் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கான சட்ட விரோத பயணங்கள்…

என்ன பெயரோ? (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் வெளியீடு

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினைக் வலியுறுமாறு புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற  நாடுகளது அரசுகளை கோருமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இக்கோரிக்கையினை வலிறுத்தும் பொருட்டு அனைத்துலக விசாரணையினை கோரும் தபால் அட்டைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டு வைத்துள்ளது.…

இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்

இலங்கையில் மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர். நேற்று திங்கட்கிழமை கம்பஹா மாவட்டத்திலுள்ள மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒப்பநாயக்க பள்ளி வாசல் மீதும் அடையாளந் தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல்களை…

ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈழ ஆதரவாளர் தீக்குளித்து…

போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடலூர் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 44 )  என்பவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு…

கறையான் போல் நாட்டை அரிக்கிறது காங்கிரஸ்; மோடி ஆவேசம்

காங்கிரஸ் கட்சி, கமிஷன் ஆட்சி நடத்துகிறது. தொடர்ச்சியான ஊழல்களால் கறையான் போல் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது. பிரதமர் பதவியில் இருக்கும் மன்மோகன் சிங், சோனியா குடும்பத்தின் இரவு காவலாளி போல் செயல்படுகிறார் என பா.ஜ., மூத்த தலைவர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். பா.ஜ., தேசிய கவுன்சில்…

‘இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் குற்றச்சாட்டுகள்’ : இராணுவத் தளபதி

இலங்கைக்கு அபகீர்த்தி எற்படுத்தவும், ஓர் ஆட்சி மாற்றத்தையும் கொண்டு வருவதற்காகவே ஜெனீவாவில் மனித உரிமைகளை நாங்கள் மீறியிருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் நாங்கள் குற்றமற்றவர்கள்; எமது இராணுவத்தினர் ஒழுக்கமானவர்கள். அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள் என்று இலங்கையின் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கிளிநொச்சியில் கூறியிருக்கின்றார்.…

வெ. 32 லட்சம் என்ன ஆனது? கா. ஆறுமுகம் விளக்கம்

இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உதவ மலேசிய அரசாங்கம் வழங்கிய நிதி என்ன ஆனது? அந்த நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பது பற்றி கா. ஆறுமுகத்தை போலிஸ் விசாரிக்க வேண்டும் என்று முரளி சுப்பிரமணியம் போலிஸ் புகார் செய்திருந்தார். இது குறித்து வழக்கறிஞர் கா.…

தமிழர் தாகமும் தமிழீழத் தாயகமும்

(ஒரு பார்வையாளரான தமிழினியின் பதிவுகள்:- மார்ச் 3, 2013 - கண்டனப் பேரணி,  பிரிக்பீல்ட்ஸ்,  கோலாலம்பூர்.) உன்னைச் சுட்டு எலும்பை எடுத்துப் பாதையில் வீசினர் பாதைகள் மூடப்படுமென... சாம்பலை எடுத்து காற்றில் எறிந்தனர் காற்றும் மெளனமாய் இருக்கட்டுமென. மெளனத்துக்கு அப்பாலும் வாழ்வுண்டு மரணத்தை மீறியும் போராட்டம் உண்டு... புரிந்து…

இலங்கை தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும்; மலேசியா அதை முன்னெடுக்க…

இன்று காலை 11.00 மணியளவில் கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் கருப்பு உடை கண்டன ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. செம்பருத்தி இணையத்தளம் எற்பாடு செய்திருந்த இந்த கண்டன ஊர்வலத்தில் சுமார் 800-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஜொகூர், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், கேமரன் மலை, சிலாங்கூர் மற்றும்…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய கோரிக்கை

தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றப்பேரவை கூட்டப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கை (இங்கே சொடுக்கவும்) நேற்று மலேசிய வெளியுறவு அமைச்சிடம் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் மலேசிய வெளியுறவு அமைச்சரை பிரதிநிதித்து இலங்கை தொடர்புடைய மனித உரிமை…

பூச்சோங்கில் புதிய மின்சுடலை; மக்கள் போராட்டத்திற்கு வெற்றி!

பூச்சோங் மயானத்தில் பல ஆண்டுகளாக இருந்த தகனம் செய்யும் வழிமுறைக்கு சுபாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஒரு புதிய மின்சுடலையின் வழி தீர்வு கண்டுள்ளது. இன்று அந்த மின்சுடலையின் வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சுபாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் அஸ்மாவி பின் கஸ்பி விளக்கமளித்தார். 2011…

சிறந்த இசைக்காக ஆஸ்கார் விருது பெற்ற தமிழர்

சிறந்த இசைக்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ள ‘லைப் ஆப் பை’ படத்திற்கான , இசை சேர்ப்பு பணியில் தானும் இடம் பெற்றது, பெரிதும் மகிழ்ச்சிக்குரியதாக உள்ளதாக சென்னையைச் சேர்ந்த ஒலி வடிவமைப்பாளர் சாய் ஸ்ரவணம் தெரிவித்துள்ளார். உலக அளவில் சிறந்த சினிமாவிற்காக வழங்கப்படும் உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது…

புதியதாக உருவாகிறது ‘டைட்டானிக் 2’

நியூயார்க்: டைட்டானிக் கப்பலை யாராலும் மறக்க முடியாது. கடலில் மூழ்கி 100 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்த கப்பலைப் போலவே புதிய கப்பலை உருவாக்க முடிவு செய்துள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்கத் தொழில் அதிபர் கிளைவ் பால்மெர். அதற்காக, டைட்டானிக்-2 கப்பலின் மாதிரி வடிவமைப்பை நியூயார்க்கில் அவர் வெளியிட்டார்.…

‘இனி மீண்டும் அப்பறவை பூமிக்குத் திரும்பாது’ – பா.அ. சிவத்தின்…

இன்று காலை சாலை விபத்தொன்றில் மரணமடைந்த கவிஞர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரை எழுத்தாளர்,  செய்தி ஆசிரியர் திரு. பா.அ. சிவம் குறித்து நினைவலைகளைப் பகிர்வதில் பெரும் துயர் கொள்கின்றோம். செம்பருத்தி மாத இதழ் வெளிவந்த தொடக்க கால கட்டங்களில் சிவத்தின் படைப்புகள் வெளிவராத இதழ்கள் மிகக் குறைவு எனக் கூறலாம்.…

மீண்டும் திரையில் நடிக்கும் ஜெயலலிதா?

தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் இதயேந்திரன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவனது இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்தனர் அவனது பெற்றோர்கள். இதயேந்திரன் இருதயத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் துணிச்சலுடன் எடுத்துச் சென்று இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா…

சிறிலங்காவிற்கு சவால் மிகுந்த களமாக மாறியுள்ள ஐ.நா மனித உரிமைப்…

ஜெனீவா- ஐ.நா மனித உரிமை பேரவை சிறிலங்காவிற்கு சாவால் மிகுந்த இராஜதந்திரக்களமாக மாறியுள்ள நிலையில், அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் கருத்துக்கள் பொய்கள் நிறைந்த வழமையான பல்லவியாகவே அமைந்திருந்ததென ஜெனீவாவில்உள்ள தமிழர் தரப்பு பிரதிநிதிகளில் கருத்து தெரிவித்துள்ளனர். ( VIDEO ) புதன்கிழமை மூன்றாம்நாள் அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர்…

‘போர்க்குற்ற விசாரணை தேவை’ : உலகத் தமிழர் பேரவை மாநாடு

உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு முழுமையான, வெளிப்படையான, நம்பகத்தன்மை…