‘இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்டவர்கள் நாடு திரும்ப முடியாதாம்’

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு எதிராக செயற்பட்ட யாரும் மீண்டும் நாட்டிற்குள் வர முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயாலாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். தேவையென்றால் இந்தியாவில் தமிழீழம் ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். இலங்கையில் அந்த பேச்சுக்கே இடமில்லை…

மாலுமிகளை திருப்பி அனுப்பாத இத்தாலி; கோபத்தில் இந்தியா!

இந்தியாவில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனது கடற்படையினர் இருவரை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்ப முடியாது என்று இத்தாலி அறிவித்துள்ளது இந்தியாவில் கடுமையான எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ளது. இத்தாலியின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தம்மிடம் தெரிவித்ததாக அவரை செவ்வாய்…

முகநூல் “விருப்பங்கள்” ஒருவரை அடையாளம் காட்டிவிடும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

பேஸ்புக் எனப்படும் முகநூலில் ஒருவர் விரும்பும் விஷயங்களை வைத்து, அவரது பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை அவரது அனைத்து குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக் என்பது மனிதர்களின் இன்றியமையாத அடிப்படை அடையாளமாக மாறிவருகிறது. இந்த…

இலங்கைக்கு எதிராக பிரித்தானியா செயற்படவேண்டும் : டேவிட் மில்லிபேன்ட்

பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு பிரித்தானிய Read More

டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை!

டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டபேருந்து சாரதி ராம் சிங், திகார் சிறையில் இன்று (11) அதிகாலை 5 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிசம்பர் 16ம் திகதி‌ ஓடும் பேருந்தில் தனது நண்பருடன் சென்ற போது 23 வயது…

ஈழத் தமிழருக்கு ஆதரவு- தமிழகத்தில் பற்றி எரியும் மாணவர்கள் போராட்டம்!

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் பற்றி எரிந்து வருகிறது. இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச…

கென்யாவின் அதிபராகத் துடிக்கும் ஒபாமாவின் அண்ணன்

நைரோபி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அண்ணனான மாலிக் ஒபாமா கண் நிறையக் கனவுகளுடன் வலம் வந்து கொண்டுள்ளார். கென்யாவின் அதிபராவதே தனது லட்சியம் என்று அவர் கூறுகிறார். டெய்லி மெய்லுக்கு அவர் ரொம்பவே மனம் திறந்த பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். தனது தம்பி அமெரிக்க அதிபரானது போல…

ஈழத் தமிழருக்காக 3வது நாளாக மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம்

வெள்ளிக்கிழமை காலை முதல் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள் அய்கப் வளாகத்தில் இலங்கை அரசை கண்டித்தும், இந்தியாவை கண்டித்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை மீது சர்வதேச போர்குற்ற விசாரணை நடத்தப் பட வேண்டும், ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், சிங்கள தூதரகத்தை தமிழகத்தில் இருந்து…

சிரியா உள்நாட்டுப் போரில் இந்திய வம்சாவளி போராளிகள்

டெல்லி: சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் இந்திய வம்சாவளிப் போராளிகளும் போராடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிரிய அதிபர் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் சிரியா நாட்டு போரில் இந்திய வம்சாவளி போராளிகளும் போராடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்த ஆசாத்தின் அரசியல் ஆலோசகர் ஷாபான்…

தமிழக மீனவர்கள் கடற்படையினர் தாக்குதல்: மீனவருக்கு எலும்பு முறிவு

காரைக்கால் மீனவர்கள் 6 பேர் மீது இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு நாட்களில் மீனவர்கள் தாக்கப்படுவது இது மூன்றாவது முறை என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(53). அவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவரும், அதே பகுதியைச் சேர்ந்த…

‘அனைத்துலக பொறிமுறையின் அவசியத்தை இணைத்திருக்கலாம்’

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையத்தில் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வரைவை புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓரளவு வரவேற்றிருக்கிறது. இந்தத் தீர்மானங்களின் மூலம் இலங்கை தமிழர்களின் பிரச்னையை…

இலங்கை மீது சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை வேண்டும் : அமெரிக்கா

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை சமர்பித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவின் நிலைப்பாடு பற்றி இன்னும் முடிவு செய்யப்பட்வில்லை. இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமை ஆணையம் நேற்று (07) ஒரு அறிக்கை…

இசைப்பிரியாவை கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றம்: ரணில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும் என எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். போர்க் காலப் பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக மிக மோசமான…

உள்ளடக்கங்களைக் கொண்டே முடிவெடுக்க முடியும் – மன்மோகன் சிங்

மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் Read More

இந்தியாவை இலங்கை மறைமுகமாக மிரட்டுகிறது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த அட்டூழியங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், மீனவர்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை இலங்கை அரசு மறைமுகமாக மிரட்டுகிறது என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர்…

பேரணிக்கு வந்தவர்கள் தடுக்கப்பட்டது குறித்து அமெரிக்கா அதிருப்தி

காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கொழும்பிற்கு வராமல் வவுனியாவில் தடுக்கப்பட்டமை குறித்து Read More

திமுக-வை பாரட்டியதாக வெளிவந்த தகவலை மறுக்கிறார் ‘சனல் 4’ கெலம்…

இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் துணைத் தலைவர் மு.க.ஸ்டாலினை, சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பாராட்டியதாக, திமுக பிரசாரம் செய்து வந்தது. தி.மு.கவின் இந்த போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான…

காணாமல் போன ரஷ்ய வீரர் 33 ஆண்டுக்கு பிறகு ஆப்கனில்…

மாஸ்கோ: காணாமல் போன, ரஷ்ய படை வீரர், 33 ஆண்டுகளுக்கு பின், ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார். கடந்த, 1979ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் நவீன சோஷலிச அரசை உருவாக்கும் நோக்கத்தில், அங்குள்ள முஜாகிதீன் அமைப்பினருடன் போரிட, ரஷ்யா தனது செஞ்சேனை படைகளை, அந்நாட்டுக்கு அனுப்பியது. தொடர்ந்து பத்து ஆண்டுகள் நடந்த போரில்,…

மாலி சண்டையில் 10 பிரான்ஸ் வீரர்கள் பலி

பாரீஸ்: மாலியில் கிளர்ச்சியாளர்களுக்கும், மாலி இராணுவம், பிரான்ஸ் கூட்டுப்படைக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டயில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மெக்ரூப் என்ற கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு கெதிராக போர் தொடுத்து வருகின்றனர். மாலி இராணுவத்திற்கு கடந்த ஜனவரி முதல் பிரான்ஸ் உதவிசெய்து வருகிறது. மாலியின் வடகிழக்கே…

‘காணாமல் போனோரின்’ உறவினர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள் தங்களது உறவுகளை கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரியும், அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனோரை விடுதலை செய்யக்கோரியும், தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வடக்கிலிருந்து வந்த பலரை வவுனியாவில் போலிசார் தடுத்து நிறுத்திய நிலையில், கொழும்பில் நடந்த…

இலங்கையில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது : விக்கிரமபாகு

இலங்கையில் சுதந்திரம் என்பது கிடையாது, இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பு அசாத் சாலி மன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;…