சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!

சென்னை: தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிங்களவர் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிட்சுவை விரட்டி விரட்டி உணர்வாளர்கள் நேற்று தாக்கினர். அவர்கள் அங்கிருந்து தப்பி…

தமிழினத் துரோகிகளாக மாறாதீர், மனோகரன் எம்பி எச்சரிக்கை

இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவும் மலேசியத் தமிழர்களின் மனிதாபிமான செயலுக்கு யாரும் மாசு கற்பிக்க வேண்டாம். எட்டப்பர்களாக மாற வேண்டாம் என்று தெலுக் இந்தான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசிய தமிழர்ப் பணிப்படைக் குழு துணைத் தலைவருமான எம். மனோகரன் கேட்டுக்கொண்டார். ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்திற்கும்…

கூகுளின் ‘ஆண்ட்ராய்டு’ பிரிவு தலைவராக தமிழர் நியமனம்

சான் பிரான்சிஸ்கோ: பிரபல 'கூகுள்' இணையதள நிறுவனத்தின், 'ஆண்ட்ராய்டு' பிரிவின் தலைவராக, இந்திய வம்சாவளி தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார். ஸ்மார்ட் போன்கள் மற்றும் சிறிய வகை மடிக்கணினிகளை பயன்படுத்த உதவும் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, 2008ல் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தற்போது, உலகில் உள்ள ஸ்மார்ட்…

ஒருங்கிணையும் மாணவர்கள் : ஈழத்திற்காக வலுப்பெறும் போராட்டம்

சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியலை துளியும் அண்டவிடாமல் தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வழியுறுத்தியும், சென்னை…

இலங்கை செல்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை!

ஜெனிவா: இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து நேரில் ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மே மாதம் அங்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைக்கான நவநீதம் பிள்ளையின் பயணங்கள் ஏற்கெனவே இரு முறை ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது…

‘சர்வதேச அழுத்தத்துக்கு அரசாங்கமே பொறுப்பு’ – ஐதேக

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கடந்து ஆண்டு தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதே இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரான ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை கடந்த ஆண்டில் இலங்கை குறித்த தனது…

‘இலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்’ – சமரசிங்க குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற போர்க் குற்ற குற்றச்சாட்டுக்கள், நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தகர்க்கும் நோக்குடனானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத்தூதுவரான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். அம்னஸ்டி இண்டர்நாஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகியவற்றை பெயர் குறித்துப் பேசிய சமரசிங்க, இலங்கைக்கு…

மஇகா வேண்டுமா? அது எதிர்க்கட்சியாக உருவாகட்டும்!

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 18.03.2013 கடந்த 56 வருடங்களாக ஆளுங்கட்சியில் பெயர் போட்ட மஇகா, அடுத்த தவணையில் எதிர்கட்சியாக இருந்து போராட வேண்டும். நமது நாடு விடுதலையடைந்தது முதல் இந்தியர்களின் பிரதிநிதியாக மஇகா-தான் இருந்து வருகிறது. அதன் பிரதிநிதித்துவம்தான் அரசாங்கத்தின் அனைத்து மட்டத்திலும் இருந்தது.…

தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டித் தாக்கப்பட்ட சிங்கள புத்த பிக்குகள்

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகளின் சார்பில்லாமல் தன்னெழுச்சியாக தமிழக மாணவர்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். தமிழகமே உணர்வு…

ஐநாவில் இலங்கை நிலவரங்கள் குறித்து பலதரப்பு வாதங்கள்

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில், பல்வேறு நாடுகளின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து ஆண்டு தோறும் ஆராயும் யுனிவர்சல் பிரியாடிக் ரெவ்யூ எனப்படும் வழிமுறை பற்றிய அமர்வு வெள்ளியன்று நடந்தது. அதில் குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்த வருடாந்த ஆய்வு மிகவும் முக்கியமான ஒன்றாக…

‘சர்வதேச விசாரணை இல்லாவிட்டால் மத்திய அரசில் தொடரமாட்டோம்’ – கருணாநிதி

ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை Read More

அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இது குறித்து மேலும்…

சாவேஸ் மரணத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல் காரணமா?

காரகஸ்: அன்னிய நாட்டு உளவுத்துறையினரின் சதிச் செயலால்தான் அதிபர் ஹியூகோ சாவேஸ் மரணமடைந்தார் என்று குற்றசசாட்டு எழுந்திருப்பதால் அதுகுறித்து விசாரிக்கப்படும் என்று வெனிசூலா நாட்டு எண்ணை வளத்துறை அமைச்சர் ரபேல் ரமீரேஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அதிபரின் மரணத்திற்கு வெளிநாட்டு உளவுத்துறையினரின் சதி காரணமாக இருக்கலாம் என்று…

ஐரோப்பாவைச் சேராதவர் போப் ஆண்டவராக தேர்வு

வாடிகன்: ஐரோப்பா அல்லாத நாட்டைச் சேர்ந்த ஒருவர், 1,300 ஆண்டுகளுக்கு பின், போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். போப் ஆண்டவராக இருந்த பெனடிக்ட், உடல்நிலை மற்றும் வயோதிகத்தின் காரணமாக கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து, புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. இத்தாலி நாட்டின், வாடிகன் நகரில், கத்தோலிக்க…

கலாட்டா கல்யாணம்! நடிகர் விஜய் சுவர் ஏறிகுதித்து தப்பி ஓட்டம்!

புதன்கிழமை காலை 9 மணிக்கே நடிகர் விஜய் வருவார் என்று விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்களுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டபத்திற்குள் பத்திரிகை மீடியாக்கள் தவிர 700 பேர்களுக்கு மட்டுமே பாஸ்…

கொழும்பில் காமன்வெல்த் மாநாடு: கனடா பிரதமர் புறக்கணிப்பு

இலங்கைத் தலைநகர் கொழும்பில் வரும் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் புதுப்பிப்புக்கான கனடா சிறப்புத் தூதர் ஹக் சேகல் இது தொடர்பாகக் கூறியதாவது: கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க எங்கள் பிரதமர்…

நான் தமிழ் பையன், எனக்கும் தமிழுணர்வு உள்ளது: நடிகர் சிம்பு…

சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை நடிகர் சிம்பு சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம்…

இலங்கை மனித உரிமை மீறல்: புதிய ஆவணம் வெளியீடு

இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவம் இழைத்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய வீடியோ மற்றும் புகைப்படங்களை உலகத்தமிழர் பேரவை ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கிறது. புதிய புகைப்படத்தில், கீழ் உள்ளாடை மட்டும் அணிந்த தமிழ் இளைஞர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் உட்கார வைக்கப்பட்டிருப்பது காட்டப்படுகிறது. இந்தக்…

இரு துளி கண்ணீர்! (நாச்செல்)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

நீரழிவு நோய் வரும்முன் காத்தல் – காணொளி வழி மருத்துவ…

அன்றாட வாழ்க்கை முறைகளில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தியர்களை தற்போது அதிகமாக பாதிக்க கூடிய நோய்களாக நீரழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் காணப்படுவதாக கூறுகிறார் மருத்துவர் ம. சண்முக சிவா. இந்த இரு நோய்களும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக கூறும் அவர், சிலருக்கு…

‘தமிழர்களை குழப்பும் செயற்பாட்டை முரளி நிறுத்திகொள்ளவேண்டும்’

ஈழத்தமிழர்களுக்காக மலேசிய அரசாங்கம் வழங்கிய 32 இலட்சம் வெள்ளி மீதான காவல்துறையினரின் விசாரணை முடியும்வரை பூச்சோங்க முரளி சுப்பிரமணியம்  அமைதி காக்க வேண்டும். காவல்துறையில் புகார் செய்த பிறகு அமைதியாக இருப்பதை விட்டு தினசரி பத்திரிக்கைகளில் சுய விளம்பரம் தேடிக்கொண்டிருக்கிறார். தமிழீழ இலட்சியத்தை நோக்கிய ஆயுதப் போராட்டம் இலங்கையில்…

ஜனநாயக லீக் கட்சி தலைவராக அவுங் சாங் சூச்சி மீண்டும்…

யாங்கூன்: மியான்மரில், தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவராக, அவுங் சாங் சூச்சி, மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில், பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சி நடக்கிறது. அந்நாட்டின் ஜனநாயக தலைவரான அவுங் சாங் சூச்சி, 90ம் ஆண்டு நடந்த ஜனநாயக தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். ஆனால்,…