மைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக் கொண்டாட்டம்!

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவ்வகையில் தான் தன்னார்வலர்கள் இயங்குகிறார்கள். அது மனிதனிடம் இயற்கையாகவே உள்ள நற்பண்பாகும். இதையே ஔவை ‘அறம் செய விரும்பு’ என்கிறார்.

தனது சொந்த விருப்பின் பேரில் சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப்பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைக்கும் இவர்களுக்குகென்று உண்டாக்கப்பட்ட தினம்தான் தன்னார்வலர்கள்  தினமாகும். ஐக்கிய நாட்டுச்சபை இதற்கென்று டிசம்பர் 5 ஆம் தேதியை அனைத்துலக தன்னார்வலர்கள் தினமாக பிரகடணம் செய்துள்ளது.

இருப்பினும் நாம் நமது சூழலுக்கு ஏற்ற வகையில் கிடைக்கும் எந்த  சந்தர்ப்பத்திலும் தன்னார்வ வகையில் தொண்டாற்றுபவர்களை பராட்ட வேண்டும், நினைவுகூற வேண்டும். பிறர் செய்த நன்மையை மறவாது உணர்ந்திருப்பது செய்ந்நன்றியறிதல்ஆகும் என்கிறார் வள்ளுவர்.

‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது’ என்பது  குறலாகும்.

அவ்வகையில்தான், 2017ஆம் வருடத்திலிருந்து 3M மலேசியா நிறுவனம் மைஸ்கில்ஸ்சுடன் இணைந்து சமூக முன்னேற்ற முயற்சிகளுக்கு கைகொடுத்து வருகிறது.

கடந்த 14/08/19 அன்று 3M மலேசியா நிறுவனத்தினர், கலும்பாங்கில் உள்ள மைஸ்கில்ஸ் வளாகத்தில் தன்னார்வலர் தினத்தை மைஸ்கில்ஸ் மாணவர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.

3M மலேசியா நிறுவனத்தின் இயக்குநர் திரு. பரமேஸ்வரன் நாயர் மற்றும் 56 தன்னார்வலர்கள் மாணவர்களுடன் ஒன்று சேர்ந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மருத்துவர். சண்முகசிவா அவர்களது வரவேற்புரையைத் தொடர்ந்து பேசிய பரமேஸ்வரன் அவர்கள் மாணவர்களுக்கு எழுச்சியூட்டும் விதமாகத் தனது உரையை வழங்கினார்.

வேடிக்கையான அறிவியற் சோதனைகள், சுவரோவியம் தீட்டுதல் மற்றும் மரம் நடுதல் ஆகிய நிகழ்வுகளில் 3M மலேசியா நிறுவனத்தின் தன்னார்வலர்கள் மற்றும் மைஸ்கில்ஸ் மாணவர்கள் மகிழ்வோடு பங்களித்தனர். சுவையான மதிய உணவுக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், மாணவர்கள் மற்றும் 3M மலேசியா நிறுவனத் தன்னார்வலர்கள் இணைந்து உருவான 15 குழுக்களுக்கும்  பரிசுகள் வழங்கப்பட்டன.

நீங்கள் ஏன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மை மொரிங்கா-வை வாங்க வேண்டும்!