மை மொரிங்கா – மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் அறிமுகம்! – முருங்கைக் கீரையின் சத்துகளும், மருத்துவப் பயன்களும்

நீங்கள் ஏன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மை மொரிங்கா-வை வாங்க வேண்டும்!

1.மைஸ்கில்ஸ் அறவாரியம் இலாப நோக்கமின்றி, சேவை அடிப்படையில் இயங்கும் அறவாரியமாகும். நமது சமுதாயத்தின் சவால்மிக்க மாணவர்களின் வாழ்வியல் சிந்தனையை மாற்றியமைத்து அவர்களுக்குத் தொழிற்கல்விப் பயிற்சியை வழங்குகிறது.

2. முருங்கை மரம் பயிரிட்டு அதன் மூலம் MyMoringa பொருளைத் தயாரித்து விநியோகம் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் செயல்படுவதை மைஸ்கில்ஸ் அறவாரியம் தனது பொருளாதார ரீதியில் தடையில்லாமல் செயல்படுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக எடுத்துள்ளது.

3.மைஸ்கில்ஸ் அறவாரியம் களும்பாங் வளாகத்தில் ஒரு சிறு பகுதியில் 1500 முருங்கை மரங்களை நட்டு, அதன் மூலம் கிடைக்கும் இலைகள் மூலம் MyMoringa (முருங்கை இலைத் தூள்) தயாரிக்கப்படுகின்றது.

4.ஒருங்கிணைந்த வாழ்க்கையின் புறப்பாட நடவடிக்கையாக இங்கு பயிலும் மாணவர்கள் பயிரிடுவது, தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர்.

5.எங்களின் தொலைநோக்குப் பார்வையாக MyMoringa பொருளை இங்கு பயின்ற மாணவர்களால் இணையம் மற்றும் சமூக ஊடக வழியாக நேரடி விற்பனையில் ஈடுபடச் செய்வதாகும்.

உடலுக்கு கிடைக்கப்பெறும் நலன்கள்

  • இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
  • தொற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி வளர்க்கக் கூடியது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • உடல் வீக்கத்தின் தன்மையைக் குறைக்கக் கூடியது.
  • நினைவாற்றல் மற்றும் கவனத்தன்மை அதிகரிக்கும்.

முருங்கை பூமியில் விளையும் அதிக ஊட்டச்சத்து உள்ள ஓர் அருமையான உணவு

ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவத்தில் முருங்கை இலை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.

  • தீச்சலன்றிகள் நிறைந்த உணவு. ( Rich in Antioxidants )
  • ஹோர்மோன்களின் செயல்பாட்டிற்கு உதவுகின்றது.
  • கல்லீரலைப் பாதுகாக்கின்றது.
  • இருதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
  • தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

(விளம்பரம்)