அண்மைய காலமாக தொடர்ந்து சிறுமிகள் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருவது பரவலாக தகவல் ஊடகங்கள் வழியாக மிகுந்த வேதனையுடன் பார்த்து வருகிறோம்.
சில சிறார் காப்பகங்களும் இதற்கு விதி விலக்கல்ல.
இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் மகஜர் ஒன்று, எதிர்வரும் 30.8.2019 மதியம் 3.30க்கு, மகளிர் குடும்ப சமூகநல மேம்பாட்டுத் துறை அமைச்சர் அலுவலகம், பெர்சின் 4 , புத்ராஜாயாவில் , சமர்ப்பிக்க உள்ளது. இந்நிகழ்வை நீதி குழு என்ற அரசு சாரா அமைப்புகளும் சமூக செயட்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து ஒருங்கிணைக்கின்றனர்.
இந்த பிரச்சனையைத் துடைத்தெறிக்க அரசாங்கமும் பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை உடனுக்கு உடனே செயல் வடிவம் படுத்திக்கொண்டு இருப்பது வரவேற்க தக்கது.
அவர்களுக்கு உறுதுணையாக இந்த மகஜரில் செய்யப்படும் பரிந்துரைகள் அமையும் என்று நீதிக் குழு இந் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு.உலக நாதன், திரு. அண்ணாமலை, குமாரி. கோமளம், திரு. ராம மூர்த்தி மற்றும் திரு.த.புண்ணிய மூர்த்தி ஆகியோர் நம்புவதாய் தெரிவித்தனர்.
மேலும், குற்றம் புரிந்து அகப்படாமல் இருக்கும் மற்றும் குற்றம் புரிந்துக் கொண்டிருக்கும் அயோக்கியர்களுக்கு எச்சரிக்கை ஊட்டும் வகையில் இந்நிகழ்வு அமையும் என்கிறார்கள்.
சிறுமிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமான நபர்கள் மற்றும் உறவுகளாவே உள்ளனர். இதனால் குடும்ப உறவுகளே சீர்குலைந்து சின்னாபின்னமாகும் அபாயம் அதிகரித்து கொண்டு வருகிறது. குழந்தைகளை குழந்தைகளாக பாருங்கள். அவர்களின் குழந்தை பருவத்தை நிம்மதியாக அனுபவிக்க விடுங்கள். தனிமனிதர் ஒழுக்கமும் சுயகட்டுப்பாடும் மிக அவசியம். இதுபோன்ற இழிவான செயல்களை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது.
அனைத்து அரசு சாரா இயக்கங்களும், பொது மக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நம் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு ஒன்றிணைவோம் வாருங்கள்! என்று அழைக்கிறது இந்த நீதி குழு அமைப்பு.
தொடர்புக்கு : 016-630 0113 திரு.உலக நாதன்/ 016-519 4564 திரு. அண்ணாமலை, 017-235 1508 திரு. ராம மூர்த்தி / 014-305 1386 திரு.த.புண்ணிய மூர்த்தி