வெளிநாடுகளில் புகலிடம் கோருவோருக்கு இலங்கை குடியுரிமையை நீக்குகிறது அரசு

வெளிநாடுகளில் அடைக்கலம் கோருவோரின் குடியுரிமையை நீக்கும் புதிய சட்டம் ஒன்றை சிறிலங்கா கொண்டு வரவுள்ளது. இந்தத் தகவலை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் மேலும்…

“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்” – வெளியாகிறது மற்றொரு…

தமிழ் பெண்கள் மீதான சிறிலங்கா அரசபடைகளின் பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கையொன்றை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ளது. 140 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை வரும் 25ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக, நியுயோர்க்கைத் தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்…

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் 11 பேர் பலி

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் தொடர்ச்சியாக இரண்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்புக்களில் குறைந்தபட்சம் 11 பேராவது கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. உள்ளூர் நேரப்படி மாலை 7.30 மணியளவில் இந்தக் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. மக்கள் நெரிசல் மிக்க நகரில் இருக்கும் ஒரு பஸ் நிலையத்தில்…

ராஜபக்ஷ மீது போர்க்குற்ற விசாரணை வேண்டும்: பஞ்சாப் அரசியல் கட்சி

இந்தியாவின் பஞ்சாப் மாநில தீவிர அரசியல் கட்சியான டால் கல்சா (Dal Khalsa) இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை குறித்து சனல் 4 ஒளிப்படம் வெளியிட்டதை அடுத்து இந்த கண்டனம்…

சனல் 4 தொலைக்காட்சிக்கு ஆதாரங்கள் கிடைத்தது எவ்வாறு?

ஈழத்தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை உலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வெளிக்கொண்டு வந்ததில் சனல் 4  தொலைக்காட்சியினதும் அதன் பணியாளர்களினதும் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால், அவர்களுக்கான உறுதியான ஆதாரங்கள் எவ்வாறு கிடைக்கின்றது எனபது பலருக்கு தெரியாமலே இருந்து வந்தது. இந்நிலையில், தமக்கான ஆதாரங்களை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்…

இலங்கை வீரர்கள் பங்குபெறும் ஆசிய தடகளப் போட்டிகளை ரத்து செய்தார்…

தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை விளையாட்டு வீரர்களும் பங்கு பெறக்கூடும் என்ற நிலையில் இருபதாவது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படமாட்டாது என அறிவித்திருக்கிறார். எதிர்வரும் ஜூலை மாதத்தில் அப்போட்டிகளை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் இலங்கை வீரர்களும் பங்கு பெற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக…

இலங்கையை தண்டிக்க இதுவே தக்க தருணம்; ஐ.நாவிடம் சுட்டிக்காட்டுகிறது சனல்…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்படுவதற்கு முன்பாக இராணுவப் பதுங்குகுழி போன்று காட்சியளிக்கும் ஓர் இடத்தில் பிஸ்கட் சாப்பிடும் படத்தை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை அரசைத் தண்டிக்கத் தவறிய ஐ.நாவுக்கு தற்போது அதற்கான சந்தர்ப்பம் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது என்றும்…

நஷூத் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க இந்தியா முயற்சி!

இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், கைது செய்யப்படுவதை தவிர்க்க, இந்திய வெளியுறவு அதிகாரிகள், மாலைதீவு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாலைதீவில், 2008ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட முகமது நஷீத் (வயது 45) நீதிபதி…

பால்முகம் மாறாத பாலகனே.. பாலசந்திரனே! அபிமன்யு போல அஞ்சாமல் களப்பலி…

இலங்கையில் பிரபாகரன் மகன் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐ.நா, சபை ஆழ்ந்த கவலை கொள்வதுடன், தீர்வு சொல்லட்டும் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கனவுகளின் ஈரம் காயாத கண்கள்: சர்வதேச சமூகத்தின் கண்ணீர் மீண்டும் ஒருமுறை…

பாலச்சந்திரன் கொல்லப்பட்டதன் எதிரொலி: சென்னையில் தாக்குதல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலைசெய்யப்பட்ட புகைப்படங்களை சனல் 4 வெளியிட்டதன் எதிரொலியாக சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிமனை தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷ இந்த கொடூரக் கொலைக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக…

விற்பனை நோக்கத்திற்காக ஈழம் குறித்த உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தாதீர்

மலேசியாவில் முக்கிய நாளிதழ்களாக கருதப்படும் இரு தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த முன்பக்க செய்தி இன்று மலேசிய தமிழர்கள் பலரைக் கலவரப்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காலையில் நாளிதழைப் பார்த்த உடனே ஏதோ ஒரு பாரமும் விவரிக்க முடியாதொரு துக்கமும் மனமெங்கும் விரவி விட்டதைத் தடுக்க முடியவில்லை. நேற்றைய…

இலங்கை இனப்படுகொலை : உலகத்தமிழரை ஒருங்கிணைக்கும் அரசியல் ஆயுதம்

கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர். ஆயுதமற்ற நிலையில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் மார்பில் ஐந்து முறை சுடப்பட்டு கொல்லப்பட்ட புகைப்படங்கள் உட்பட்ட செய்தி தற்போது வெளிவந்துள்ளது. வழக்கம் போலவே,  இந்த மிகக் கொடூரமான குற்றத்தையும் இலங்கை…

மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பாலச்சந்திரனின் விவகாரம் கொண்டுவரப்படும்

இலங்கையில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாகவும், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த பிரபாகரனின் 12வயது மகன் விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின்…

ஜொகூர் PSM கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’…

மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), ஜொகூர் நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’ நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (23.02.2013 ) மாலை மணி 7.30-க்கு ஜொகூர், ஜாலான் பீசாங் காபாஸ் 1-ல் அமைந்துள்ள செராம்பி தெராத்தாய் உணவகத்தில் (Restoran Serambi Teratai, Jalan Pisang…

போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்து கிள்ளானில் ஊர்வலம்

போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை மலேசிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மையில் கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (காணொளி) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம் பெரியோர் என சுமார்…

இலங்கையின் வடக்கே இராணுவ அடக்குமுறை : விக்கிரமபாகு

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கம் இராணுவ ரீதியிலான அடக்குமுறையை வடக்கில் முன்னெடுத்து வருவதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். கொழும்பு - 7 இல் அமைந்துள்ள அசாத்சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விக்கிரமபாகு கருணாரத்ன…

பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத போர்க்குற்றம்: ஜெயலலிதா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரன் இலங்கை இராணுவத்தால் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டது, மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதனால் இலங்கை மீது சர்வதேச பொருளாதாரத் தடையைக் கொண்டு வர மத்திய அரசு அமெரிக்காவுடன்…

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை அவசியம் : மனித…

இலங்கை மீது சர்வதேச சுயாதீன போர்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மனித உரிமை ஆணையத்தை வலியுறுத்துமாறு கோரி மனித உரிமை ஆணைய உறுப்பினர்களுக்கு மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. 2012-ம் ஆண்டு ஜெனீவா மனித…

கல்லல்ல கடவுள்! (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 26 பேர் இந்தோனேசியாவில் கைது

இந்தோனேசிய டியூங் தீவிற்கு அருகில் வைத்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகு சேதமடைந்த காரணத்தினால் கடற் பரப்பில் 12 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையிலேயே இந்தோனேசிய காவல்துறையினர் இவர்களை காப்பாற்றியுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான நிலையில் அப்படகோட்டி…

ஜெயலலிதா – வைகோ திடீர் சந்திப்பு : காரணம் என்ன?

அ.‌‌தி.மு.க. அரசு பொறு‌ப்பே‌ற்று 20 மாத‌ங்க‌ள் ஆ‌கியு‌ம் முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதாவுட‌ன் எ‌ந்த தொட‌ர்பு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ளாத வைகோ, அ.‌தி.மு.க. அரசை கடுமையாக ‌‌விம‌‌ர்‌சி‌த்து‌ம், போர‌ா‌ட்ட‌ங்க‌ள் நட‌த்த‌ியு‌ம் வ‌ந்தா‌ர். இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள டா‌ஸ்மா‌க் கடைகளை மூ‌ட‌க்கோ‌ரியு‌ம், பூரண மது‌‌வில‌க்கை அம‌ல்ப‌டு‌த்த‌க் கோ‌ரியு‌ம் ம.த‌ி.மு.க. பொது‌‌ச் செயலாள‌ர் வைகோ…

‘சைபர் தாக்குதலின் பின்னணியில் சீன இராணுவப் பிரிவு’

கணினி துறையில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான உயர் மட்ட சைபர் தாக்குதல்களின் பின்னணியில் ஒரு குறித்த சீன இராணுவப் பிரிவு இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட கணினி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கான மூல ஆதாரமாக ஷங்கையில் உள்ள ஒரு டவர் புளொக் மையம்…

பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு சுட்டுக்கொலை!

முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் கொடூரக் காட்சிகளால் உலகமே அதிர்ச்சி யுற்றிருக்கையில், இப்போது கிடைத்திருப்பவை இதயத்தை ஒருகணம் நிறுத்தி வைக்கக் கூடிய அதி கொடூரங்கள் நிறைந்த காட்சிகள் என 'The Independent'  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு சந்தைப் பகுதியில் தொலைந்து போன சிறு குழந்தை போல் ஒரு மூலையில் அந்தச்…