கலைகள் மக்களுக்காகவே என்ற இடதுசாரி கருத்தில் மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் அமரர் மணிவண்ணன். தன் முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை, பெரும்பாலானவற்றில் மக்கள் பிரச்சினைகளை, கிராமங்களின் அவலங்களை எளிமையும் எள்ளலுமாக சொல்லிய மக்கள் கலைஞன்.
எண்பதுகளில் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர். ஆனால் இன்றைய தலைமுறை அவரை வெறும் நடிகராக மட்டுமே அறிந்திருந்தது. அந்த நினைப்பை உடைக்க 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கிய படம்தான் அமைதிப்படை 2.
அரசியல் கழிசடைகளை மீண்டும் அம்பலப்படுத்தியதோடு, இந்த நாட்டின் இயற்கை வளங்கள் எப்படிக் கொள்ளை போகின்றன என்பதை மிக எளிமையாக உலகுக்குக் காட்டியிருந்தார். இது அவருக்கு 50வது படம்.
தமிழகத்தில் ஈழப் போராட்டங்களுக்கு அடிகோலிய மாமனிதர்!- மணிவண்ணனுக்கு புலிகள் அஞ்சலி
ஈழப் போராட்டம் தமிழகத்தில் முழுவீச்சில் நடக்க அடிகோலிய மாமனிதர் மணிவண்ணன் என்று விடுதலைப் புலிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எம்மினம் எதிர்கொண்டுவரும் இனஅழிப்புக்கு எதிராகவும் திரு. மணிவண்ணன் அவர்களது குரல் ஓயாது ஒலித்து வந்துள்ளது. இவர் வெறும் பேச்சாளராக மட்டும் தன்னை மட்டுப்படுத்தாமல் பல்வேறு தளங்களில் ஈழ விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் உண்மையான இன உணர்வோடு உழைத்த களச்செயற்பாட்டாளர்.
ஈழப் போராட்டத்தோடு திரு மணிவண்ணன் அவர்களின் தொடர்பும் பங்களிப்பும் அளப்பெரியது. எமது தாயகத்துக்கு நேரடியாக வருகை தந்து எமது போராட்டத்தோடும் எமது மக்களோடும் தன்னை ஒன்றித்துக் கொண்டவர்.
எமது போராட்டம் தொடர்பில் ஆழமான பார்வையைக் கொண்டிருந்த திரு. மணிவண்ணன் அவர்கள் தமிழகத்தில் ஈழப்போராட்டச் செயற்பாடுகள் பலவற்றுக்கு அடிகோலியவர்.
நல்ல இயக்குனர், நல்ல நடிகர், நல்ல கதாசிரியர், எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல தமிழ் உணர்வாளர். தமிழ் இனத்துக்கு இது ஒரு பேரிழப்பு!
ஈழத் தமிழனுக்காக உரிமைக் குரல் எழுப்பிய உன்னதமான தமிழ் நடிகர் மணிவண்ணன். புலிக்கொடியை போர்த்தி செல்லும் தமிழ் நாட்டு வீரத் தமிழன்.
என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பிறகு தமிழ் சினிமா உலகில் சமூதாய சிந்தனையை தூண்டியவர் திரு மணிவண்ணன் அவர்களின் மறைவு
தமிழகத்துக்கு மட்டுமல்லாது மலேசியா நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பு?காரணம் அவர் எல்லா துறையிலும் சிறந்து விளங்கினார்..
அமரர் மணிவண்ணன் அவர்களின் மறைவு ஒட்டு மொத்த இந்தியர்களுக்கே பேரிழப்பு . இவர் ஒரு வீர திருமகன் என்பதனை எவராலும் மறுக்க முடியாது . இவரின் இழப்பு அண்ணன் சீமான் அவர்களை பெரிதும் பாதித்திருக்கும். அண்ணன் சீமான் அவர்களின் இந்த போராட்டத்தில் வெற்றி பெற அமரர் வீர திருமகன் மணிவண்ணன் அவர்கள் ஆன்மா என்றும் துணை நிற்கும்.