சீன ஆய்வுக் கப்பல் இலங்கைக்குள் வருவது உறுதி

சீன ஆய்வுக் கப்பலான 'சி யான் 06' கப்பலானது இலங்கைக்குள் பிரவேசிக்க  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா அமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கப்பலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நளின் ஹேரத்…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் –…

“மக்கள் பிரதிநிதிகளே நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவர்களின் உயிர்களுக்கு அல்லது அவர்களின் வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட ஒருபோதும் இடமளியேன்” என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பில் அமைந்துள்ள வீட்டின் முன்பாக நேற்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே…

பணவீக்க குறைப்பினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிப்பு

இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணிற்கமைய 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளுக்கான இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. உணவு…

புதிய அரசமைப்பே தீர்வுக்கு ஒரே வழி – தேசிய மக்கள்…

இலங்கையில் ஜனநாயகம் வலுவடைய வேண்டுமெனில் அதிகாரப் பகிர்வு என்பது மிகவும் அவசியம். அவ்வாறு ஜனநாயகம் வலுவடையும்போது தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண வழிபிறக்கும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய. அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு…

தமிழரின் உரிமையை பலியிடும் சம்பந்தனுக்கு அரச மாளிகை

தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்தாத இந்திய, சீனாவின் கப்பல் வருகையை கண்டு அஞ்சுவதாகவும் அவ்வாறான இந்தியாவின் வாலைப்பிடித்துக்கொண்டு கூட்டமைப்பு அடிமைகள் செயற்படுவதாகவும் செ. கஜேந்திரன் எம். பி குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,…

இலங்கை அனைவருக்கும் சொந்தமானது

இலங்கையில் இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நடத்துவதற்கான காலம் தற்பொழுது வந்துள்ளதாக எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து இந்தப் போராட்டத்தை நடத்த முன்வர வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1948 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திரத்துக்காக போராட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்திருந்ததாக…

நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை

வீடியோ எடுத்தால் உன்னை கொலை செய்வேன் என பௌத்த பிக்கு ஒருவர் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதன் ஊடாக இந்த நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை நேற்றைய சம்பவம் வெளிப்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(23.08.2023) நடைபெற்ற ஊடகவியலாளர்…

இலங்கையில் தீவிர உணவு பாதுகாப்பின்மைக்கு உள்ளாகியுள்ள 1 இலட்சம் மக்கள்

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களால் ஒரு ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நாடளாவிய ரீதியிலுள்ள குடும்பங்கள் மத்தியில் நேரடியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 3.9 மில்லியன் மக்கள் ஓரளவு உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கும், 100 000 மக்கள் தீவிர உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களான…

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க நிபந்தனையற்ற ஆதரவு

போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பது தேசிய பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது என்றும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டால், அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, 9/11 ஆணைக்குழுவால் Department of Homeland Security என்ற புதிய பிரிவு நிறுவப்பட்டதாகவும், 30 ஆண்டுகால…

வறட்சியால் விவசாயிகள் பெரும் பாதிப்பு

தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக நேற்றைய (22) நிலவரப்படி பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள வயல் நிலங்களின் அளவு 51,055.19 ஏக்கராக அதிகரித்துள்ளது. ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 424.70 ஏக்கர் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட…

அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் – மௌனம் கலைத்தார்…

அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். இப்போது எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள் என அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சமகால அரசியல் விவகாரம் குறித்து பேசிய அவர், தேர்தலை நடத்த அரசு அஞ்சவில்லை. நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து…

இலங்கைக்கு முதல்வெற்றியை பெற்றுக்கொடுத்த மிஸ் நெலுனி சௌந்தர்யா

கானாவில் நடைபெற்ற 4ஆவது மிஸ் ரீன் சுற்றுலா போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மிஸ் நெலுனி சௌந்தர்யா, இன்று புதன்கிழமை (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். 20 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியானது கானாவின் அக்ரா நகரில் கடந்த முதலாம் திகதி முதல் 20…

பங்களாதேஷ் வழங்கிய கடனை செலுத்திய இலங்கை

பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர்கள் கடனில் ஒரு பகுதியாக 50 மில்லியன் டொலர்களை மீள செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளபோதே இந்த கடன் பெறப்பட்டது. எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் மற்றொரு தவணை செலுத்தப்படும், எனினும் இரண்டாவது தவணையாக இலங்கை எவ்வளவு…

இலங்கை சிங்கப்பூருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை அரசுக்கும் சிங்கப்பூர் அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சிங்கப்பூரில் கைச்சாத்திடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இன் பிரகாரம், காபன் வெளியேற்றத்திற்கு ஒத்துழைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வில் சிங்கப்பூர் பிரதமர் திரு.லீ சியன் லூங் மற்றும் இலங்கை ஜனாதிபதி திரு.ரணில்…

முற்றுகையிடுவோம் வாருங்கள் – சிங்களவர்களுக்கு அழைப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பில் உள்ள வீட்டின் முன்பாக இந்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கையின் கடும்போக்குவாத அரசியல் கட்சியான பிவித்தூறு ஹெல உறுமய அழைப்பு விடுத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

சிங்கப்பூர் ஜனாதிபதியை சந்தித்தார் ரணில்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு  சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யெகோப் பை  சந்தித்தித்துள்ளார். ஜனாதிபதி இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை சிங்கப்பூர் பயணித்தார். இந்த பயணித்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி…

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் உள்ள சிக்கல்களுக்கு உடனடி…

விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்வனவு செய்வதற்கு போதியளவு பணம் ஒதுக்கப்படாததால், திறைசேரியில் இருந்து பெறப்பட்ட நிதியில் குறிப்பிட்ட தொகை நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும்…

மருந்தை மாற்றி வழங்கியதால் பலியான பெண்

தனியார் மருந்தகம் ஒன்றில் தவறுதலாக வழங்கப்பட்ட மருந்தை பயன்படுத்திய பெண் ஒருவர் சுகவீனமடைந்து உயிரிழந்துள்ள சம்பவம் இங்கிரிய பகுதியில் பதிவாகியுள்ளது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு புற்றுநோயிக்கான மருந்து வழங்கப்பட்டமை காரணமாக அவர் உயிரிழந்ததாக  பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இங்கிரிய  ஊருகல…

சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இலக்குகளை விரைவாக அடையக்கூடிய, முன்னணி துறையாக சுற்றுலாத்துறை காணப்படுவதால், அதனை மேம்படுத்துவதற்கான பல முக்கிய தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “இன்று இந்த யால பிரதேசத்தில் உயர்தர சொகுசு ஹோட்டலை…

மருத்துவர்களுக்கு தீர்வு வழங்காவிடின் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

மருத்துவர்களின் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு உடனடி தீர்வை வழங்காவிடின் எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக மருத்துவர்களை அச்சுறுத்தும் முயற்சியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில தினங்களில்…

இலங்கையில் தடுப்பூசியால் பதிவான மற்றுமொரு மரணம்

இலங்கையில் தடுப்பூசியால் மற்றுமொரு உயிரிழப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. களனி- திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தெனுஜ சஸ்மிர நாணயக்கார என்ற 6 வயதுடைய சிறுவன் சம்பவத்தினால் துரதிஷ்டவசமான இறந்துள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.…

ரணிலுக்கு ஆதரவளித்திருந்தால் முள்ளிவாய்க்கால் காப்பாற்றப்பட்டிருக்கும்

“2005 ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் முள்ளிவாய்க்கால் பிரச்சினையைத் தடுத்திருக்கலாம் ”எனத் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் மாற்றுக்…

கொள்முதல் செய்யப்படும் நெல்லினை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக…

கொள்முதல் செய்யப்படும் நெல்லினை அரிசியாக மாற்றி 29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நெல்லை கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு போதிய நிதி கிடைத்துள்ளதாக சபை அறிவித்துள்ளது. கடந்த பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு…