தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக நேற்றைய (22) நிலவரப்படி பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ள வயல் நிலங்களின் அளவு 51,055.19 ஏக்கராக அதிகரித்துள்ளது.
ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 424.70 ஏக்கர் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு 51,479.89 ஏக்கர் என விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்படி சபையினால் நேற்று (22) வரை தயாரிக்கப்பட்ட பயிர் சேத மதிப்பீடுகளின் படி தயாரிக்கப்பட்ட தினசரி அறிக்கை இன்று (23) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், நெல் பயிர்ச்செய்கை செய்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 45,678 ஆகவும், இதர பயிர்கள் சேதம் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 394 ஆகவும் உள்ளது.
நெல் மற்றும் இதர பயிர்கள் சேதமடைந்த மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 46,072 ஆகும்.
நேற்றைய நிலவரப்படி குருநாகல் மாவட்டத்தில் அதிகளவு பயிர் சேதம் பதிவாகியுள்ளதுமன் அதன் அளவு 24,647.92 ஏக்கர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ad