யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிரந்தர வீடுகளில் குடியமர்த்துவதற்கு அனைத்துத் தரப்புக்களும்…

வடக்கு- கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நிரந்தர வீடுகளில் மீள்குடியேற்றுவதற்கு அனைத்துத் தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த காலங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டாலும் மேலும் 165,000 வீடுகளுக்கு மேல் வீட்டுத் தேவை…

விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்?

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் முதலாவது தொகுதி, அண்மையில் (24) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நிகழ்வில், விசேட அதிதியாகக் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், நூலை வெளியிட்டு வைத்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பத்திரிகை அறிமுக நிகழ்வொன்றில், இருவரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த…

இலங்கையில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!

நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்தும் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என்று சூளுரைத்துள்ள சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர், இராணுவ முகாம்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் முழுமையான அதிகாரம் படையினருக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதான…

தலைவர் பிரபாகரனுக்கு ஞானசார தேரர் புகழாரம்!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறிப்பிட்டிருந்தது உண்மையான ஒரு விடையம் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானாசார தேரர் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை…

விடுதலை புலிகளை அழிக்க உதவிய நாடுகள் இவைதானாம்..

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு உதவியது. இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஜக்கிய இராட்சியம், கனடா, அவுஸ்திரேலியா, இந்த நாடுகள் எல்லாவற்றிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டார்கள். பலவிதங்களில் அவர்கள் முடக்கப்பட்டார்கள். அவ்விதமான செயற்பாட்டின் காரணமாகத்…

வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது

ஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடி என்பன முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும், பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர…

“பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு…

தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையை முக்கியம் என்றும், பிரிந்து நின்று செயற்பட்டால் அழிவுதான் மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகின்றார் ‘  என்ற நூல் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று…

‘என்னை வெளியேற்றுவதற்கு குறி வைப்பு’

கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்க முடியாதவன் நான் என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கட்சியில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்றார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று…

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத்தேடி தீவிர வேட்டை!

முல்லைத்தீவில் வெடிபொருட்களுடன் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டதை அடுத்து கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத கிடங்குகளைத் தேடும் பணிகள் இன்று அதிகாலை முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக எமது பிராந்தியச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு பேராறு பகுதியில் முச்சக்கர…

“வல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான ஆயுத…

"உலகின் வல்லரசு நாடுகள் நடத்திய கூட்டுச் சதியினாலேயே தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமானதும், நீதியானதுமான தீவிர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது," என நாட்டின் எதிர் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம்,…

அமைச்சர் பதவியை ஏற்குமாறு சம்பந்தனுக்கு அழைப்பு

எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சுப் பதவியை ஏற்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சரும் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். “அரசியல் தீர்வு வரும்வரை காத்திருந்தது போதும். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்…

‘புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தோல்வியடைந்தால் பிரிவினை உருவாகும்’

புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியுறும் பட்சத்தில், அது மேலும் மக்களிடையே பிரிவினையை உருவாக்குமென, எதிர்க்கட்சித் தலைவரும் த.தே.கூ தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மேலும், மென்போக்காளர்கள் ஒன்று சேர்ந்து இயங்குகின்ற பட்சத்தில் புதிய அரசமைப்பானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யலாம் எனவும்…

விடுதலை செய்யப்படுவாரா ஆனந்த சுதாகரன்?

யாழ் இந்திய துணைத் தூதுவர் திரு.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பாக 22.06.2018 அன்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் கலந்துரையாடினார். தாயை இழந்தும், தந்தை சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, வயதான பேத்தியாருடன்; வாழும், இரு சிறுவர்களின் ஆரோக்கியமான, பாதுகாப்பு…

வெளிநாட்டில் இருந்து காசு போய் சுமந்திரனை கொல்ல திட்டம்: சிங்கள…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்யும் நோக்கில் முன்னாள் போராளிகள் சிலர், புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலரால் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக நான்கு தினங்களுக்கு முன்னர் இராணுவ புலனாய்வுப் பிரிவு, பொலிஸாருக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தது.இதுகுறித்து, பொலிஸ் புலனாய்வுப் பிரிவு தயார்படுத்தப்பட்டது. தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை…

சிறிலங்கா அதிபர் எதையும் செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்

சிறிலங்காவில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புகளும் கற்பனைக்கு எட்டாத போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் நீதி அவர்களின் கண்களில் தென்படவேயில்லை என்றும் தெரிவித்துள்ளார் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான கிறிஸ் ஸ்மித். “சிறிலங்காவின் மனித உரிமைகள் கரிசனைகள்” என்ற தலைப்பில் நடந்த அமெரிக்க காங்கிரசின் உப குழுக் கூட்டத்துக்கு தலைமை…

முல்லைத்தீவில் மீண்டும் விடுதலைப்புலிகள்?

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் இன்று (22.06.2018) காலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன், வெடிபொருட்களை வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முல்லைத்தீவு மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் பல்வேறு இடங்களில் இராணுவம், பொலிசார், விசேட அதிரடிப்படையினர்…

புலிகளின் புதையலைத் தேடிய வான்படை வீரர்கள் கைது!

முள்ளிவாய்காலில் விடுதலைப் புலிகள் புதைத்துவைத்ததாக நம்பப்படும் புதையலை பலர் தேடி வருகின்றார்கள். முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் நிலத்தை அகழ்ந்து புதையல் தேடிய சிறிலங்கா விமானப்படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் சிறிலங்கா காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். -athirvu.in

மைத்திரியைப் புறக்கணித்த கூட்டமைப்பு?

ஸ்ரீ லங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. நிகழ்வுக்கான அழைப்பிதழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. வடக்கு, கிழக்கு மாகாண ஜனாதிபதி விசேட செயலணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்தச் செயலணியில் தமிழ்த்…

ஈழத்தமிழ் குடும்பத்துக்கு அவுஸ்திரேலியாவில் காத்திருக்கும் ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த நடேசலிங்கம், பிரியா ஈழத் தமிழ் தம்பதிகள் தமது நாடுகடத்தலை நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்திருந்த மனு அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் நடேசலிங்கம், பிரியா தம்பதிகளும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் ஸ்ரீலங்காவுக்கு நாடு கடத்தப்படலாம்…

அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுமாறு விக்னேஸ்வரனிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்து.!

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாறுபட்ட வகையில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டதாக என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் ஸ்ரீலங்காவிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுமாறும் குட்டையை குழப்ப வேண்டாம் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ் கேட்டுக்கொண்டதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு…

போரில் இறந்த புலிகளுக்கு இழப்பீடு வழங்கும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும்…

போரில் இறந்த விடுதலைப் புலிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்காக, சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அமைச்சரவை மூன்றாவது தடவையாக நேற்று நிராகரித்துள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடமாகாண அபிவிருத்தி, இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக…

காணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் வெளியீடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைத் தலைவர் என்று அடையாளப்படுத்தப்படும் சின்னத்தம்பி மகாலிங்கம் என்ற இளம்பரிதி இறுதிகட்டப் போரின்போது முள் வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு சென்றதை கண்டதாகவும் சாட்சியங்கள் கூறியுள்ளதாக ITJP என்ற சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் (International Truth…

துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம் என்கிறார் கருணா- கூட்டமைப்பினுள் துரோகிகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள் தான் ராணுவத்திற்கு எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்தார்கள். அவ்வாறு சிங்கள ராணுவத்திற்கு காட்டிக் கொடுத்த பலர் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளார்கள். இதில் சுரேஷ் பிரமசந்திரன், மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் அடங்குவார்கள் என்று கருணா கூறியுள்ளார். ஈ.பி.ஆ.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய இயக்க…