அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்திய கொரோனா- சீன நிலவரம் குறித்து…
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 90 நாட்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா…
வீழ்ச்சியில் சியோமி நிறுவனம், அதிரடி வேலை குறைப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்
கொரோனா கட்டுப்பாடுகளால் பெருமளவு விற்பனை சரிந்ததால் ஆண்டுக்கு 11 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது எனவும், அதனால் சியோமி நிறுவனத்தில் சுமார் 15% ஊழியர்கள் வேலை இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனத்தில் ஒன்று சியோமி நிறுவனம் (ரெட்மி) நவம்பர் மாதம்…
சீனாவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கக் கூடும்- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கொரோனா…
உக்ரைன் ரஷியா போர் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும் –…
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக் கடந்துள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்த போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக ஐ.நா.பொது செயலாளர் கூறினார். உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை,…
சீனாவின் கோவிட்-19 நோயாளிகள் மருந்து தட்டுப்பாட்டினால் வேதனை
கோவிட்-19 நோயாளி ஒருவருக்கு வியாழன் டிசம்பர் 15 அன்று காய்ச்சல் தொடங்கியது. "எனது உடலின் ஒவ்வொரு பகுதியும் நரகத்தைப் போல வலிக்கிறது" என்று கிழக்கு சீனாவில் உள்ள ஓய்வு பெற்ற 67 வயதான தொழிற்சாலை ஊழியர் கூறினார். "எனது வாழ்நாள் முழுவதும் கடுமையான ஆஸ்துமாவால் நான் மிகவும் கவலைப்பட்டேன்,"…
உளவு செயற்கைக்கோளுக்கான இறுதிக் கட்ட சோதனையை நடத்தியது வடகொரியா
உளவு செயற்கைக்கோளை உருவாக்குவதற்கான "முக்கியமான இறுதிக்கட்ட சோதனையை" வட கொரியா மேற்கொண்டது, இது அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று மாநில ஊடகங்கள் திங்களன்று தெரிவித்தன. சியோலின் இராணுவம் இரண்டு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை பியோங்யாங் ஏவியதைக் கண்டறிந்ததாகக் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த…
லக கோப்பை கால்பந்து சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு ரூ. 342 கோடி…
உலக கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய அர்ஜென்டினா அணிக்கு ரூ.342 கோடி பரிசு வழங்கப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் அர்ஜென் டினா 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில்…
2-வது முறையாக அயர்லாந்து பிரதமாகிறார் லியோ வரத்கர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், 2-வது முறையாக அயர்லாந்தின் பிரதமராக பதவியேற்க உள்ளார். 43 வயதான லியோ வரத்கர், மகாராஷ்டிராவில் உள்ள வரத் கிராமத்தைச் சேர்ந்த அசோக் வரத்கர் என்ற மருத்துவருக்கு பிறந்தார், அசோக் வரத்கர் 1960 களில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு அயர்லாந்தைச் சேர்ந்த செவிலியராக…
உக்ரைனின் கீவ், கார்கிவ் நகரங்களை குறிவைத்து ரஷியா மீண்டும் ஏவுகணை…
உக்ரைன், ரஷியா இடையிலான போர் 10 மாதமாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை அந்நாட்டு ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது. இதில் சில நகரங்களை மீண்டும் பிடிக்க ரஷிய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, ரஷிய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம்…
பெருவின் ஜனாதிபதி மாறியதற்கு எதிராக மக்கள் போராட்டம், 7 பேர்…
பெரு நாட்டில் கடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவாளரான பெட்ரோ காஸ்டிலோ வெற்றிபெற்று கடந்த 2021 ஜூலை மாதம் பெரு நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு , அண்மையில், நாடாளுமன்றத்தை கலைத்து , புதிய அரசை நியமிக்கப்போவதாக அறிவித்தார். இதனால் அவசர நிலையை அமல்படுத்தினார். இதற்கு நாடாளுமன்ற எம்.பிக்கள் எதிர்ப்பு…
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அமெரிக்கா அளித்தால், அதுதான் முதல் இலக்கு-…
அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அளித்தால், அதுதான் முதல் இலக்கு என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்கினால் அதுதான் ரஷ்யாவிற்கு முதன்மையான இலக்காக இருக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்ரியாட் ஏவுகணைகள், அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட…
கொரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வருகிறது உலக சுகாதார…
சீனாவின் உகான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும்…
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பெண்ணுரிமை அமைப்பிலிருந்து ஈரான் நீக்கம்
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பெண்கள் உரிமை அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களை ஈரான் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதாக அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அடுத்த நான்கு ஆண்டுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனப் பெண்கள் ஆணையத்தில் ஈரான் இருக்காது. ஐக்கிய நாட்டு நிறுவனப் பொருளியல் சமூக மன்றத்தில்…
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்திலும் போர் தொடரும்: ரஷ்யா
கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்திலும் உக்ரேனில் போர் தொடரும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரேனிய மக்கள் பத்து மாதமாகக் கடுமையான போரைச் சந்தித்து வரும் நிலையில் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சில் ரஷ்யாவும் உக்ரேனும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதுவரை பல்லாயிரம் பேர் போரில்…
தென்கொரியாவில் ஒரே நாளில் 84 ஆயிரம் பேருக்கு கொரோனா
கடந்த சில நாட்களாக தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 84 ஆயிரத்துக்கு 571 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. சீனாவை போலவே தென்கொரியாவும் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறது. அங்கு திடீர்…
ஆப்கானிஸ்தானை விட்டு விரைவில் வெளியேற சீனர்களுக்கு அறிவுறுத்தல்.!
ஆப்கானிஸ்தானை விட்டு விரைவில் வெளியேறுமாறு சீனக்குடிமக்களுக்கு அந்நாடு அறிவுறுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. சீனர்கள் அதிகம் சென்று வரும் இந்த ஹோட்டல் மீது குறிவைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய…
உலக கோப்பை கால்பந்து- குரோஷியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு அர்ஜென்டினா…
முதல் கோல் அடித்து வெற்றி கணக்கை தொடங்கி வைத்தார் மெஸ்சி. முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா முன்னிலை. கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா…
கத்தார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு- ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர்…
கத்தார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். எவா காயிலி உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய வளைகுடா நாடுகளில் ஒன்றான…
ஆஸ்திரேலியா: துப்பாக்கிச் சண்டையில் 2 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலத்திலுள்ள புறநகர்ப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 காவல்துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் மாண்டனர். காணாமற்போன ஒருவரைத் தேடுவதற்காகச் சம்பவம் நடந்த இடத்திற்குக் காவல்துறையினர் நேற்றிரவு சென்றிருந்தனர். சம்பவ இடத்தில் ஒரு பெண் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆயுதமேந்திய…
ஈரான்: பொது இடத்தில் தூக்கிலிடப்பட்ட இரண்டாம் நபர்
ஈரானில் இரண்டாவது நபர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்கிறார். மஜித்ரெஸா ரானாவார்த் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது வாரத்தில் தூக்கிலிடப்பட்டதாக Mizan இணையச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. பல மாதங்களாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் அவரும் ஒருவர். அவர் கத்தியைக் கொண்டு பாதுகாப்புப் படையினர் இருவரைக் கொன்றதாகவும், மேலும் நான்கு பேரைக்…
நிலவுக்கு அனுப்பப்பட்ட நாசாவின் ‘ஓரியன்’ விண்கலம் பூமிக்கு திரும்பியது
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப 'ஆர்டெமிஸ்' என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல 'ஓரியன்' என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது. சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட…
“மெஸ்ஸியைக் குறிவைத்து விளையாடுவது இலக்கல்ல; ஒட்டுமொத்த அர்ஜென்ட்டினா குழுவைத் தடுத்து…
கத்தாரில் இடம்பெறும் உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்ட்டினாவைச் சந்திக்கிறது குரோஷியா. 2018ஆப் போன்று இம்முறையும் இறுதியாட்டத்துக்குச் செல்ல முனைந்துள்ளது குரோஷியா. இந்நிலையில் அர்ஜென்ட்டினா அணியின் சிறந்த விளையாட்டாளராகக் கருதப்படும் லயனல் மெஸ்ஸியை மட்டுமே குறிவைத்து விளையாடுவது தனது உத்தியல்ல என்று குரோஷியா அணி தெரிவித்துள்ளது. முழு…
பாகிஸ்தான் மக்கள் மீது ஆப்கானிஸ்தான் எல்லைப்படை துப்பாக்கிச்சூடு- 6 பேர்…
ஆப்கானிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி வந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆப்கானிஸ்தான் படைகள் பொதுமக்கள் மீது பீரங்கி உள்பட கனரக ஆயுதங்கள் மூலம் கண்மூடித்தனமான தாக்குதல்…