அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டது’ – உலக வங்கி
பாகிஸ்தானின் பொருளாதார மாடல் தோல்வி அடைந்துவிட்டதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 1.25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாகவும் உலக வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானுக்கான உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக் கூறியது: "கடந்த ஒரு நிதி ஆண்டில், பாகிஸ்தானில்…
பள்ளி மைதானங்களில் குழந்தைகளுக்கு போர் பயிற்சி: ரஷியாவிற்கு வலுக்கும் கண்டனம்
ஷியாவில் பரவலாக அனைத்து இடைநிலைக்கு மேற்பட்ட பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பதுங்கு குழி தோண்டுவது, கையெறி குண்டு வீசுவது, துப்பாக்கியை கையாளுதல் உட்பட பல போர்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டிற்காக தியாகம் செய்வதை பாராட்டும் விதமாக பள்ளி கல்வியில் பாடதிட்டங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. பெரும் பொருட்செலவில் இதில் ரஷியா ஈடுபட்டு சுமார்…
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கையாள புதிய திட்டம்
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையைக் கையாள்வதற்கு அதிபர் ஜோ பைடன் புதியதோர் அலுவலகத்தை அமைத்துள்ளார். அதனைத் துணையதிபர் கமலா ஹாரிஸ் வழிநடத்துவார். மாநில அளவிலான துப்பாக்கிப் பாதுகாப்புச் சட்டங்களை அலுவலகம் இயற்றும். புதிய அலுவலகத்துக்குக் குறிப்பிட்ட அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் துப்பாக்கியை ஆக்கபூர்வமாய்ப் பயன்படுத்தும் சூழல் எட்டப்படவில்லை. வெள்ளை மாளிகையால்…
இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை, பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை
இங்கிலாந்து பிரதமரான ரிஷிசுனக் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை பழக்கத்துக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக புகையிலை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை விதிப்பது…
வறுமை கோட்டிற்கு கீழே 1 கோடி மக்கள், அபாய கட்டத்தில்…
பாகிஸ்தானில் வறுமை குறியீடு 39.4 சதவீதத்தை தொட்டு அபாயகரமான அளவை எட்டியுள்ளது என்றும் இதனால் சுமார் 1 கோடியே 25 லட்சம் பேர் பாதிக்கப்பட போகின்றனர் என உலக வங்கி எச்சரித்துள்ளது. தற்போது காபந்து அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாத இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்…
பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தற்காலிக தடை- ரஷியா
உள்நாட்டு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரஷியா நடவடிக்கை யூரேசியன் பொருளாதார யூனியன் வர்த்தக அமைப்பில் உள்ள நாட்டிற்கு இந்த தடை இல்லை. உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போர் காரணமாக உலகளாவிய அளவில் உணவு தட்டுப்பாடு,…
விதிகளை மீறி ஆடை அணிந்தால் பெண்களுக்கு 10 ஆண்டு ஜெயில்:…
ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய மசோதாவை ஈரான் பாராளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றி உள்ளது. ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும். ஈரான் சட்டப்படி இளம்பெண்கள், சிறுமிகள் தங்கள் தலைமுடியை…
உக்ரைனுக்கு இனி ஆயுத உதவி கிடையாது: போலந்து
மத்திய ஐரோப்பிய நாடான போலந்து உக்ரைனுக்கு 320 பீரங்கிகளையும், 14 மிக்-29 ரக போர் விமானங்களையும் வழங்கி உதவியது. போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆக்ரமித்த கருங்கடல் பகுதியை உணவு தானிய ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதை ரஷியா தடை செய்து விட்டது. இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தானியங்கள்…
பணக்காரர்களுக்கு அதிக வரி : பாகிஸ்தான் பிரதமரிடம் ஐஎம்எஃப் வலியுறுத்தல்
வசதி படைத்தவர்களுக்கு அதிக வரியை விதிக்குமாறு பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகரிடம், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது. ஐநா தலைமையகத்தில் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காகர், முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தின்…
நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் அமைந்துள்ள ஜெரால்டின் நகருக்கு அருகே இன்று காலை 9.15 மணியளவில் இந்த…
ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர உலகம் ஒன்றுபடவேண்டும் – ஸெலென்ஸ்கி
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவர உலகம் ஒன்றுபடவேண்டும் என உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். தீமையை நம்பக்கூடாது என்று அவர் நியூயார்க்கில் ஐக்கிய நாட்டுப் பொதுச்சபைக் கூட்டத்தில் கூறினார். உலகை இறுதிப்போருக்கு இட்டுச்செல்வதிலிருந்து அணுவாயுதங்கள் கொண்ட ரஷ்யாவைத் தடுத்து நிறுத்தவேண்டும். உணவுப்பொருள் முதல் எரிசக்திவரை…
எல் நினோ எதிரொலி, பெரு நாட்டில் 544 மாவட்டங்களில் அவசரநிலை…
அமேசான் மழைக்காடுகள் நிரம்பிய வட அமெரிக்க நாடு, பெரு. இதன் தலைநகர் லிமா. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடலின் மேற்புரத்தில் ஏற்படும் அதிகப்படியான வெப்பமயமாதலால் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் பருவகால மாற்றங்களில் - சில வருட கால இடைவெளிகளில் - ஒரு சமச்சீரற்ற நிலை…
சோமாலியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 167 ராணுவ வீரர்கள் பலி
சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பினர் அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபடுகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காக சோமாலியா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அண்டை நாடான எத்தியோப்பியா, உகாண்டா ஆகிய நாடுகளின் ராணுவமும் சோமாலியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ளன. அந்தவகையில் சோமாலியாவின் மேற்கு பகுதிகளில்…
10 பேரில் ஒருவர் 80 வயதானவர்; குறையும் குழந்தை பிறப்பால்…
கிழக்காசியாவில் உள்ள தீவு நாடு ஜப்பான். அந்நாடு ஒரு புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர். இந்நிலை இப்படியே நீடித்தால், 2040 வருட காலகட்டங்களில் இது 34.8…
துருக்கியில் டெஸ்லா கார் தொழிற்சாலை
அமெரிக்காவில் எலான் மஸ்க்- துருக்கி அதிபர் எர்டோகன் சந்திப்பு ஏ.ஐ., ஸ்டார்லிங், ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைக்கோள் இணையதள சேவை ஆகியவற்றில் ஒத்துழைப்பை துருக்கி வரவேற்கும் துருக்கி அதிபர் எர்டோகன் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார். துருக்கியில் எலெக்ட்ரிக்…
ஈரானில் மாஷா அமினியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தன்று தந்தை…
மாஷா அமினியின் தந்தை கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஆண்டு ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி போலீசாரால் இளம்பெண் மாஷா அமினி கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.…
புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது சீனா
புதிய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. வானில் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் யோகன்-39 என்னும் தொலை உணர்வு செயற்கைக்கோளை ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று ஏவியது. இந்த செயற்கைக்கோள் அதிநவீன புவி கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும்,…
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 75% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வேன்…
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்குவதற்கான பல முனை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியும் உள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்குகுடியரசு கட்சியினரின் ஆதரவை பெற தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த…
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு…
வங்காள தேசம்: டெங்கி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 778-ஆக உயர்வு
வங்காள தேசத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கி காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 778-ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 778-ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயால் இதுவரை 1,57,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்…
ஐபோன் 12 அதிக அளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக பிரான்ஸ் புகார்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மொபைல்போன் அதிகளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக அண்மையில் பிரான்ஸ் தெரிவித்தது. அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம். கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன்…
அரிஸோனாவில் அனல்காற்றால் 202 பேர் மரணம்
அமெரிக்காவின் வெப்பமான கோடையில் உறுதிப்படுத்தப்பட்ட வெப்ப இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, கோடையில் பீனிக்ஸ் நகரில் usஉயர் வெப்பநிலை இலையுதிர்கால அணுகுமுறையுடன் ஒப்பீட்டளவில் லேசான வானிலைக்கு வழிவகுத்தது. அரிசோனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டமான மரிகோபா கவுண்டியில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள், இந்த வாரம் செப்டம்பர்…
சீனா உதவியுடன் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டம்
சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீனா-வெனிசுலா உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சீனா உதவியுடன் முதன்முறையாக வெனிசுலா நாட்டின் விண்வெளி வீரர்கள் நிலவு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக வெனிசுலா நாட்டில்…