லிபியாவில் புயல், மழை பலி 6000 ஆக அதிகரிப்பு

லிபியாவில் புயல், மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6000-ஐ கடந்தது. பல ஆயிரம் பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் அண்மையில் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயல் கடந்த 10-ம்…

மொராக்கோ நிலநடுக்கம்: 3 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை- 2700…

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. தொடர்ந்து, 19…

கேரளா கோழிக்கோட்டில் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த மரணத்துக்கு நிபா வைரஸ் காரணமாக என கேரள அரசு சந்தேகம் கொண்டுள்ளது. ஏனெனில், உயிரிழந்தவர்களில் ஒருவரது உறவினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உயர்மட்ட…

மாலத்தீவு அதிபர் தேர்தலில் இழுபறி

மாலத்தீவு அதிபர் தேர்தலில் இழுபறி ஏற்பட்டதால் 2-வது சுற்று தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாலத்தீவு நாட்டில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் 2-வது சுற்று தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசிய நாடான மாலத்தீவில் நேற்று…

140 ஆண்டுகளுக்கு பிறகு ஹாங்காங்கில் கனமழை: மெட்ரோ ரெயில் நிலையங்கள்…

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ரோடுகள் அனைத்தும் ஆறாக மாறி இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரே நாள் இரவில் 200 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி…

மொராக்கோவில் சக்திவாய்ந்த பூகம்பம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு; 290-க்கும்…

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி 296 பேர் பலியாகியுள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது. பூகம்பம் மாரகேஷ் பகுதியில் இருந்து தென்மேற்கில்…

உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலருக்கு ஆயுத உதவி –…

உக்ரைன், ரஷியா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் அளித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 175 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இவை உக்ரேனிய படைகள் ரஷிய படைகளின் முன் பகுதியை…

5 நாடுகளை தொடர்ந்து சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு

சீனா சமீபத்தில் தனது நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது. அதே போல் சீனா தனது வரைபடத்தில் தென் சீன கடல் பகுதிகள் சிலவற்றையும் இணைத்தது. இதற்கு இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் சீனாவின் புதிய வரைபடத்துக்கு ஜப்பானும் எதிர்ப்பு தெரித்து…

மனிதர்களை செவ்வாய்க்கு அழைத்து செல்ல தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ்-ன்…

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயாராக உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்துள்ளது. பிரபல கோடீஸ்வரர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்டார் சிப் விண்கலம், மனிதர்களை நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல உருவாக்கப்பட்டதாகும். 25 முதல் 30…

ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும், வடகொரியாவுக்கு அமெரிக்கா…

ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த சூழலில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை…

பிரேசில் தென்மாநிலத்தை புரட்டிப் போட்ட புயல்

பிரேசில் நாட்டின் தென்மாநிலம் ரியோ கிராண்ட் டோ சுல்-ஐ பயங்கரமான புயல் தாக்கியதில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல் காரணமாக இடைவிடாத கனமழை பெய்ததால் 60 நகரங்கள் பாதிக்கப்பட்டன. 1,650 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ரியோ கிராண்ட் டோ சுல் மாநில கவர்னர் எட்வர்டோ…

சூடானில் உள்நாட்டு போரால் 48 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்

சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இடம்பெயர்ந்தனர். அந்தவகையில் சூடான் உள்நாட்டு…

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை மியான்மர் ராணுவம் நிறுத்த வேண்டும்…

மியான்மரில் இன்று நடைபெற்ற உச்சிமாநாட்டில் தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள் வன்முறை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்தனர், ஆளும் ஆட்சிக் குழுவை நேரடியாகக் குற்றம் சாட்டினர், இந்தோனேசியா ஒப்புக்கொண்ட சமாதானத் திட்டத்தில் சிறிய முன்னேற்றம் இருப்பதாகக் கூறியது. 2021 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி ஆங் சான்…

கடலுணவு மீது சீனா விதித்துள்ள தடையை அறவே ஏற்றுக்கொள்ள முடியாது…

கடலுணவு மீது சீனா விதித்துள்ள தடையை அறவே ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஜப்பான் உலக வர்த்தக நிறுவனத்திடம் புகார் கொடுத்துள்ளது. ஜப்பான் புக்குஷிமா அணுவாலையின் கதிரியக்கக் கழிவுநீரைக் கடலில் கலக்கத் தொடங்கியபின் சீனா அந்தத் தடையை விதித்தது. ஜப்பானிலிருந்து கடலுணவு தருவிப்பதை நிறுத்தவிருப்பதாகச் சீனா கடந்த மாதம் 31ஆம் தேதி…

உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம்

ஜிம்ஜாங் உன், ரஷியாவுக்கு ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் ரெயிலில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோ ஸ்டாக்கில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது. ரஷியா-வடகொரியா நாடுகள் இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வடகொரியா அதிபர் கிம்…

ஜப்பானின் நிலவுக்கு செல்லும் ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது

ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (எம்ஹெச்ஐ) இன்று தனது எச்-ஐஐஏ ராக்கெட்டை சந்திரன் லேண்டரை ஏற்றிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக இன்று கூறியது, சாதகமற்ற காற்று கடந்த மாதம் ஒத்திவைக்க வழிவகுத்தது. தெற்கு ஜப்பானில் உள்ள ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சியின் (ஜாக்ஸா) தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர்…

ஹிட்லரின் இனவெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு – 80 ஆண்டுகால…

கடந்த 1943-ம் ஆண்டு ஜெர்மனியின் நாஜிப் படையினர், இத்தாலியை ஆக்கிரமித்தனர். அப்போது அவர்கள், ஏராளமான இத்தாலி மக்களை கொன்று குவித்தனர். அந்த சமயத்தில், நாஜிப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதற்காக, இத்தாலி மக்களுக்கு பொது தண்டனை வழங்க நாஜிப் படை முடிவு செய்தது. இத்தாலி மக்களில் 6…

பிளாஸ்டிக் சர்ஜரியால் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு, பிரபல அர்ஜெண்டினா நடிகை…

சில்வினா லூனா வாரத்திற்கு சுமார் மூன்று முறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவைச் சேர்ந்த பிரபல நடிகை சில்வினா லூனா(43). தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், மாடலாகவும் இருந்து வந்த சில்வினா லூனா, கடந்த 2011-ம் ஆண்டு பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட நிலையில் அவருக்கு…

கடும் விலை உயர்வைக் கண்டித்து பாகிஸ்தானில் வணிகர்கள் கடை அடைப்பு…

பாகிஸ்தான் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசை எதிர்த்து பாகிஸ்தான் வணிகர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்று பாகிஸ்தானில் நாடு முழுவதும் வணிகர்கள் கடை அடைப்பில் ஈடுபட்டனர். ஜமாத் - இ – இஸ்லாமி கட்சித்தலைவரும்…

நோபல் பரிசு விழாவில் பங்கேற்க ரஷ்யா, ஈரான், பெலாரஸ் நாடுகளுக்கு…

ரஷியா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சுவீடனை சேர்ந்த பல எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து நோபல் பரிசு வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர். சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல்பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகளுக்கும்…

சிங்கப்பூரின் 9ஆவது அதிபராகிறார் தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூரின் 9ஆவது அதிபராகத்  தர்மன் சண்முகரத்னம் அதிகாரபூர்மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 70.4 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாகத் தேர்தல் துறை அறிவித்தது. தாமான் ஜூரோங் உணவங்காடி நிலையத்தில் இருந்த திரு தர்மன், தமக்குக் கிடைத்த வலுவான ஆதரவைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகச் செய்தியாளர்களிடம் கூறினார். தர்மன் தமக்கும் தமது…

ஹாங்காங் சாவோலா சூறாவளி எதிரொலி, 450 விமானங்கள் ரத்து

ஹாங்காங்கில் சாவோலா சூறாவளி எதிரொலியாக, 450-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் பள்ளிகள் மூடப்பட்டன. சீனாவின் நிர்வாக ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஹாங்காங் அமைந்துள்ளது. ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்டாங் கவுன்டி பகுதியில் இருந்து தைஷன் நகரை நோக்கி சாவோலோ சூறாவளி இன்று காலை கடந்து செல்லும் என…

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் விழுந்ததில் நிலவில் 10 மீட்டர்…

நிலவுக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியதில் தென் துருவ பகுதியில் 10 மீட்டர் அகலத்தில் பள்ளம் ஏற்படுத்திய படத்தை நாசா வெளியிட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியைஆராய, சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியது போல், ரஷ்யா லூனா -25 விண்கலத்தை அனுப்பியது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர்தரையிறங்குவதற்கு…