சிங்கள மக்களின் உறவு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லையென்று அமைச்சர் டியூ குணசேகர உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டி முன்வந்தது வரவேற்கதக்கதென்று தெரிவித்த அவர் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இந்தியாவையும் சங்கடப்பட வைத்துள்ளதென்றும் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதென்று கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு வரவேற்கத் தக்கது. ஆனால் வடமாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனமாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல.
மாறாக அது ஒரு அரசியல் அறிக்கை. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாக உள்ள அரசியல் அறிக்கை இந்திய அரசாங்கத்தையும் சங்கடப்பட வைத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13ஆம் திருத்தத்திற்கும் அப்பால் தீர்வு என்பது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்த விஞ்ஞாபனத்தால் முடியாது. அரசியல் பிரச்சினை என்பது தேசியப் பிரச்சினையில் ஒரு பகுதியாகும்.
இன்னமும் தீர்க்கப்பட வேண்டியவையாகவும், சமரசம் செய்யப்பட வேண்டியவையாகவும் பல விடயங்கள் உள்ளன.
இவற்றைத் தீர்ப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு வாருங்கள் என்று கூட்டமைப்பிற்கு பல முறை நாம் அழைப்பு விடுத்தும் கூட்டமைப்பு இன்னமும் வரவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் தெற்கிலுள்ள கடும் போக்கு சிங்களவாத அமைப்புக்கு மிகவும் மகிழ்ச்சியானதாக இருக்கலாம். ஆனால் எமக்கு அல்ல.
கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க இந்தியாவிற்கு போகத் தேவையில்லை. தெற்கில் நாம் இருக்கின்றோம். சிங்கள மக்களின் உறவு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் என்பதே இல்லை என்றார்.
இத சொல்ல உனக்கு எவளவு கொடுத்தான் எட்டப்பன மாறாத
டேய் நீ அந்த ஊரு ம இ கா காரனடா ?
ஏங்கடா டேய் ம இ கா காரனா, அவ்வளவு கேவலமா ?? போயி உன் முதுகை திரும்பி பாருடா…..!!!!
ஹஹஹ! உலதிற்க்கே வாழ கற்று கொடுத்தவனுக்கு வாழ தெரியாதா?
மோகன் ! ரஜினி கட் அவுட்டுக்கு பாலை ஊற்றி விட்டாயா இல்லையா ?
கோச்சடையன் வருது.. மோகன் ஒரே பிஸி தான். மா இ கா என்றாலே இலக்கரம்னு மலேசியாவுக்கே தெரியும். umno க்கு பல வருஷம தெரியும்.
தமிழர் நந்தா அவர்களே விடுங்கையா….ரஜினியும் ஒரு மனிதர் தானே….நாம் எல்லாரோம் அவரின் STYLA லை ரசிக்கிறோம் அல்லவா அது போதும் ஐயா…அவரை வாழ வாய்த்த நாமே அவரை தாக்கினால் எப்படி …எல்லாத்துக்கும் காரணம் கன்னடதுகார அரசியல் வாதிகள் தானே…சினிமாகாரர்கள் என்ன செய்வார்கள் பாவம்….விடுங்கையா…..